என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரத்து குறைவால் தக்காளி ரூ.140-க்கு விற்பனை
- பொதுமக்கள் அவதி
- நாளொன்றுக்கு 10 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட் மற்றும் சந்தைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு, பெங்களூரு மற்றும் ஆந்திரா பகுதிகளில் இருந்து காய்கறிகள் பழங்கள் திருப்பத்தூருக்கு விற்பனைக்கு அனுப்பப்ப டுகின்றன. இங்கு மொத்த விலையிலும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்ப டுகிறது.
எனினும், தற்போது சென்னைக்கு 30 சதவிகிதம் தக்காளி வரத்து குறைந்துள்ளதாலும், கர்நாடகா மற்றும் ஆந்திர, கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து திருப்பத்தூருக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது இதனால் கூடுதல் விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு 10 டன் தக்காளி மட்டுமே இறக்குமதி செய்யப்ப டுகிறது.
திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட் மட்டும் இதர பகுதிகளில் மொத்த விலையில், ஒரு கிலோ தக்காளி 100, முதல் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.140-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு கடும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவு தக்காளி திருப்பத்தூருக்கு வருகிறது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீண்டும் தக்காளி பயிரிடாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.






