என் மலர்
நீங்கள் தேடியது "10 grams of cannabis"
- ரோந்து பணியில் சிக்கினர்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பிரபு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அண்ணாண்டபட்டி கூட்ரோடு பகுதியில் சந்தேகத்தின் பெயரில் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
மேலும் அவரிடம் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று காந்திநகர் பகுதியில் உள்ள ஏரியில் சந்தேகத்தின் பேரில் இருந்த வாலிபரையும் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட திலீப் குமார் (வயது 24) மற்றும் வெங்கடேஷ் (24) ஆகிய 2 பேரும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






