என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager who snatched the chain"

    • போலீசார் விசாரணை
    • தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பச்சை குப்பம் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.

    இதன் அருகே முட்புதர்கள் வளர்ந்து அடர்ந்த காடுகள் போல் உள்ளது. இங்கு காதல் ஜோடிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முட்புதருக்கு காதல் ஜோடிகள் வந்துள்ளனர்.

    இதனைக் கண்ட 4 பேர் கொண்ட கும்பல் அந்த காதல் ஜோடிகளிடம் சென்று அவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் காதல் ஜோடிகளிடம் இருந்த செல்போன்கள் மற்றும் 2 பவுன் செயினை பறித்தனர்.

    பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து காதல் ஜோடிகள் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இன்று காலை போலீசார் காதல் ஜோடிகளிடம் செல்போன் நகை திருடிய பச்சை குப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 23) என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×