என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சான்றிதழ் வழங்கும் முகாம்"

    • கலெக்டர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி இதய நகரில் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களின் பிள்ளைகள் திருப்பத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு அரசு தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இவர்களுக்கு அரசு சலுகை பெறுவதற்கான சாதி சான்றிதழ் பெற சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் கடந்த வாரம் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    இதனை அடுத்து சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க சிரமம் ஏற்பட்டு வருவதாக நரிக்குறவர் இன மக்கள் மாவட்ட முறையிட்டனர்.

    இதனால் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் நேற்று இதய நகர் பகுதியில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்காகவும் முதல் - அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஜோலார்பேட்டை தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலையில் நேற்று முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    இதில் ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×