என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே தரைப்பாலத்தில் சிக்கிய அரசு பஸ்
    X

    நாட்டறம்பள்ளி அருகே ரெயில்வே தரைப்பாலத்தில் சிக்கிய அரசு பஸ்.

    ரெயில்வே தரைப்பாலத்தில் சிக்கிய அரசு பஸ்

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • மாற்று வழியில் சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி வரை அரசு பஸ் தினசரி இயக்கப்படுகிறது.

    அதன்படி நேற்று வழக்கும் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு நாட்டறம்பள்ளி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது புதுப்பேட்டை கடந்து வேட்டப்பட்டு கூட்ரோடு அருகே உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் நுழைய முயன்ற போது பாலத்தில் சிக்கி கொண்டது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கிழே இறங்கினர். இதனையடுத்து பஸ் டிரைவர் வேறுவழியின்றி மெதுவாக பின்னோக்கி சென்று திரும்பி பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மாற்று வழியில் நாட்டறம்பள்ளி நோக்கி சென்றார்.

    இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×