என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவமனை தொடக்க விழா"
- முதல் அமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற மருத்துவமனையை முதல் அமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதனை அடுத்து ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதில் ஆம்பூர் நகர மன்ற தலைவர் பதேகான் ஏஜாஸ் அஹ்மத், ஆறுமுகம், ஆம்பூர் நகரச் துணைத் தலைவர் ஷபீர் அஹ்மத், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மற்றும் நகரமன்ற உறுப்பினர் நஜீர் அகமத், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வாவூர் நசீர் அஹமத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






