செல்போன் பேசியபடி அரசு பஸ் ஓட்டிய டிரைவர்

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் நடவடிக்கை எடுக்க ெபாதுமக்கள் வலியுறுத்தல்
செல்போன் பேசியபடி அரசு பஸ் ஓட்டிய டிரைவர்
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் டவுன் பஸ்சில் டிைரவர் செல்போன் பேசியப்படி பஸ் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் அரசின் விதிமுறைகளை மீறி டிரைவர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டி செல்லுகிறார். மேலும் அவருக்கு பிடித்த நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு கொண்டு அஜாக்ரதையாக பஸ்சை ஓட்டி வருகிறார்.

இப்படி பயணிகள் ஏற்றிக்கொண்டு பஸ் இயக்குவதால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பிற பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com