மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு நடந்தது உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்
மரக்கன்றுகள் நடும் விழா
Published on

ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலையில் உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் தலைமை தாங்கினார் ஏலகிரி மலை போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் தனியார் கல்லூரி மாணவிகள் ஏலகிரி மலை இயற்கை பூங்கா உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.

இவ்விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com