என் மலர்
திருச்சிராப்பள்ளி
- திருச்சி மாநகராட்சி பகுதியில் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
- மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வரும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
திருச்சி,
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதும், பல்வேறு பகுதி களில் வார சந்தைகளும் நட ந்து வருகிறது.குறிப்பாக தில்லை நகர் 80 அடி ரோடு, உறையூர் ஹவுசிங் யூனிட், லிங்கம் நகர், பாத்திமா நகர், ராம லிங்க நகர் விரிவாக்கம், வயர்லெஸ் ரோடு, உடையா ம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வார ச்சந்தைகள் நடந்து வருகிறது.இங்கு அல்லித்துறை, எட்டரை கோப்பு, தாயனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வார சந்தைகளில் வியாபாரம் செய்து வந்தனர்.இது அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வசதி யாக இருந்ததால் பொதும க்களிடையே வரவேற்பும் அதிகமாக இருந்தது.இந்த வார சந்தைகளால் அந்தப் பகுதிகளில் நிரந்தர மாக கடை அமைத்துள்ள உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இத னால் வார சந்தைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவி த்து வந்தனர்இந்த நிலையில் தற்போது மாநகரப் பகுதிகளில் குடியி ருப்பு மற்றும் சாலைகளில் வாரச் சந்தைகள், தினசரி மாலை நேர சந்தைகள் ந டத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, மாநகரில் கடை அமைத்துள்ளவர்கள் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வருகின்றனர்.ஆனால் வார சந்தை வியாபாரிகள் எதுவும் செலுத்துவதில்லை. இது போன்ற வாரச் சந்தைகள் சாலைகளில் நடத்தப்ப டுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு குப்பைகள் அதிகமாகி மாந கராட்சிக்கு கூடுதல் பணி ஏற்படுகிறது.ஆகவே புதிய பகுதிகள், மற்றும் சாலைகளில் உரிய அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளுக்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது.அதேசமயம் விவசாயிகள் வியாபாரிகள் வழக்கம் போல் வாகனங்கள் மூல மும், வழக்கமான மார்க்கெட் பகுதிகளிலும் வியாபாரம் செய்ய எந்த தடையும் விதி க்கப்படவில்லை என்றனர்.
- உதவி கமிஷனராக கே.கே.செந்தில்குமார்
- அவருக்கு பதிலாக குளித்தலை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த
திருச்சி,
திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக கே.கே.செந்தில்குமார் பணியாற்றி வந்தார். இவர் குறித்தலை சர டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக குளித்தலை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பி.ஸ்ரீதர், திருச்சி மாநகர நுண்ணறிவு பிரி வு உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்து உள்ளார்.
- துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால் வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை
- நாளை (18ம்தேதி) முதல் 27ம் தேதி வரை
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நாளை (18ம்தேதி) முதல் 27ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிவகங்கை பயிற்சியாளர்கள் சார்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மேய்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மங்கப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே இன்று காலை தம்மம்பட்டியில் இருந்து கொப்பம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென வலது பக்கம் திரும்பியதால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனிடையே விபத்துக்குள்ளான கார் எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கால் எலும்பு முறிவடைந்தது. தகவலின் பேரில் உப்பிலியபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் விபத்து பற்றி உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ உற்சவம் இன்று( ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
முதல் நிகழ்வாக இன்று இரவு 7:15 மணிக்கு புண்யாக வசனம் மற்றும் அங்குரார் பணம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெறுகிறது. 2-வது நாள் நிகழ்வாக நாளை(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு புண்யாக வசனம், பேரீ தாடனம் நடக்கிறது. மேலும் இரவு 7.30 மணிக்கு ஸ்வர்ண கம்ச வாகன சேவை மற்றும் கண்ணாடி அறை சேவை நடக்கிறது. வருகிற 19ம் தேதி ஸ்வர்ண சிம்க வாகன சேவையும், 20ம் தேதி அனுமந்த வாகன சேவையும், 21ம் தேதி கருட சேவையும், 22 ம் தேதி சேஷ வாகன சேவையும், 23ம் தேதி கஜ வாகன சேவையும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா வருகிற 24-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை)மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக மாலை 6 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியாருடன் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளுகிறார். பின்னர் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு திருவாராதனம், நெல் அளவை ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு 9:30 மணிக்கு புஷ்ப விமான புறப்பாடும், தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் 25ம் தேதி அஸ்வ வாகன சேவை நடக்கிறது.
வருகிற 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதை யடுத்து காலை 5 மணிக்கு திருவாராதன நிகழ்வும்,காலை 5.30 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியாருடன் தேர்தட்டில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் சரியாக காலை 8.30 மணிக்கு திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். விழாவில் அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அதன் பின்னர் மாலை 4:30 மணிக்கு காவேரி தீரம் எழுந்தருளல், 5 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 5.30 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6.30 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, 6. 45 மணிக்கு பரம்பரை டிரஸ்டிகள் மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
மேலும் வருகிற 27 ம் தேதி இரவு 8:30 மணிக்கு உத்வாசன பிரபந்தம் சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும், 28ம் தேதி
இரவு 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு, இரவு 10மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறை சேவை ஆகியவையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை சஷ்டிகள் சார்பில் கே ஆர்.பிச்சுமணி ஐயங்கார் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்
- துறையூரில் பண மோசடி புகார்தி.மு.க. பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு
- மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தொகையை மூன்று பேரிடமும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சனம் (45). இவர் சிங்களாந்தபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சர்.பிட்டி. தியாகராய நகர் பகுதியில் வீட்டு மனை வாங்குவதற்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த வாலீஸ்புரம் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (38), சித்திரப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (45) ஆகிய இருவரும் அஞ்சனத்தை அணுகி, தேவாங்கர் நகர் பகுதியை சேர்ந்த நில புரோக்கரான ராஜா (45) என்பவருக்கு தெரிந்தவரிடம் வீட்டு மனை விற்பனைக்காக உள்ளதாக கூறி அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர் நிலத்தை 11 லட்சம் ரூபாய்க்கு கிரையம் பேசி, அட்வான்ஸ் தொகையாக மூன்று தவணைகளில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தொகையை மூன்று பேரிடமும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும், நிலத்தை கிரையம் செய்து தராததால் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை அஞ்சனம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் மூன்று நபர்களும் பல்வேறு காரணங்களை கூறி தட்டி கழித்துள்ளனர். இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஞ்சனம் இது தொடர்பாக முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மினிடம் புகார் மனு அளித்தார்.
இப்புகார் மனுவின் பேரில் விசாரணை மேற்கொண்ட துறையூர் போலீசார் மூன்று பேரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான மூன்று பேரையும் துறையூர் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மோசடி வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்ட நபராக உள்ள ராஜா என்பவர் மதுராபுரி ஊராட்சி 8- வார்டு உறுப்பினராகவும், இரண்டாவது குற்றம் சாட்டப்பட்ட நபராக உள்ள தமிழரசன் என்பவர் திருச்சி வடக்கு மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 108 ஓதுவா மூர்த்திகளின் தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி.
- 108 ஓதுவார்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீரங்கம்:
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் இந்திய அரசு கலாசார அமைச்சகம் சார்பில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 108 ஓதுவா மூர்த்திகளின் தேவார திருமுறை இன்னிசை பெருவிழா நேற்று நடந்தது. இதில் 108 ஓதுவார்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பக்கவாத்திய இசை கருவிகளுடன் தேவார திருமுறை இசை நிகழ்ச்சி நடத்தினர். இதில் திருவானைக்காவல் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புதிய சாலை அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது
- தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக கோவிலுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது
திருச்சி,
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவிலில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள கண்ணனூரில அமைந்து உள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் செல்லும் பிரிவு ரோட்டில் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த சாலையிலும் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.மேலும் சமயபுரம் தேர்திருவிழா உள்ளிட்ட விழாக்கள் நடக்கும் போது போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை போக்கும் வகையில்தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக சமயபுரம் மாரியம்மன் கோயில் செல்லும் வகையில் புதிய அணுகுமுறை சாலை அமைக்க இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சமயபுரத்தை இணைக்கும் வகையில் புதிய அணுகுமுறைச் சாலைகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் அமைப்பதற்காக ரூ.23.1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த புதிய சாலையானது பெருவளவாய்க்கால் கரையை ஒட்டி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வாய்க்காலின் இரு மருங்கிலும் 15 மீட்டர் அகலத்தில் நான்கு வழி சாலையாக இச்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் கால்வாயின் பக்கவாட்டில் பாதுகாப்பிற்காக 300 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவரும் கட்டப்பட உள்ளது. வாய்க்காலின் இருமருங்கிலும் அமைக்கப்படும் இந்த புதிய சாலையில் ஒருபுறம் கோயிலுக்கு செல்லும் வாகனங்களும், மறுபுறம் கோயிலில் இருந்து செல்லும் வாகனங்களும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும்.இந்த 700 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய சாலையானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் கிளை சாலையாக இருக்கும். புதிய சாலையில் கார் மற்றும் பக்தர்கள் பேருந்துகள் அனுமதிக்கப்படும். இதனால் நேரடியாக பக்தர்களின் வாகனங்கள் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று விடலாம். இதனால் பக்தர்கள் தங்கள் வாகனத்தை பார்க்கிங் செய்து விட்டு உடனடியாக சமயபுரம் கோயிலுக்கு செல்லலாம்.இந்த புதிய சாலைக்கான பணிகள் 3 மாத காலத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.மேலும் சமயபுரத்தில் 2 திருமண மண்டபம், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்ற உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக ரூ.37,7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 500 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு மண்டபமும், 300 பேர் அமரக்கூடிய வகையில் மற்றொரு மண்டபமும் கட்டப்பட உள்ளது. இதேபோல சமயபுரம் கோயில் பஸ் ஸ்டாண்டு 600 வாகனங்கள் நிறுத்தும் வகையில் மேம்படுத்தப்படுத்தவும், கோயில் பூசாரிகள், பணியாளர்களுக்கான 30 குடியிருப்புகள் கட்டவும் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
- திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கத்துடன் சுங்கத்துறை டிரைவர் பிடிபட்டார்
- கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக திடுக் தகவல் வெளியாகி உள்ளது
திருச்சி,
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் ,ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களை இண்டிகோ, ஸ்கூட்டர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் வேகமாக வெளியேறுவதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங்கி சேர்ந்த நடராஜன் (வயது43)பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிய வருகிறது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல முடியாத சோதனை மையத்தை சுங்கத்துறையின் ஓட்டுநர் தாண்டிச் சென்று பயணியிடமிருந்து தங்கத்தை பெற்று வெளியே கொண்டு செல்ல முயன்ற போது பிடிபட்டுள்ளார். இந்த தங்கத்தை விமான நிலையத்தில் வெளியே பார்கிங் பகுதியில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பரிடம் கொடுப்பதற்கு முற்பட்டதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த டேனியல் மைக்கையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்ததாக தெரிய வருகிறது. மேலும் சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எனவும், இந்த கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உடனடியாக இருந்தார்களா? எனவும் சுங்கத்துறையின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடத்தலில் பங்கு பெற்ற மூவரையும் கைது செய்ய சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுங்கத்துறை ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. நேற்று இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
- சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம் எதிரொலியால் ஆத்திரம்
திருச்சி,
சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்அருகில் அவரது உருவப் படத்தை வைத்து மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று நடந்தது.அப்போது அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை எனக் கூறி படத்தை அங்கிருந்து அகற்றி போலீஸ் ஸ்டேஷன் எடுத்துச் சென்றார். இதனையடுத்து ராமசாமி படையாட்சி படத்தை அவமரியாதை செய்ததாக கூறி, வன்னியர் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டதோடு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் போலீசார் ராமசாமி படையாட்சி படத்தை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்தனர். இதனையடுத்து அவரது உருவப்படத்திற்குவன்னியர் சங்க பொறுப்பாளர் ராஜேந்திரன், படையப்பா ரெங்கராஜ், சந்தோஷ், சக்தி, சிவாஜி சண்முகம், அதிமுக டைமண் திருப்பதி, வன்னியர் சங்கத்தினர், பாமகவினர் மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்தப் போராட்டக் காரணமாக ஸ்ரீரங்கத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- திருச்சி உறையூரில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் பெண் மாயமாகி உள்ளார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி உறையூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரது மனைவி கண்ணகி வயது 47 இவர் திருச்சியில் உள்ள ஹோட்டலில் சமையல் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் கண்ணகிக்கு அழகு முருகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த அவரது கண்ணகியின் மகன் வினோத் அதிர்ச்சி அடைந்தார் பின்னர் தாயை அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் வீட்டிலிருந்து வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற கண்ணகி மாயமானார் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை இதுகுறித்து கண்ணகியின் மூத்த மகன் விமல் உறையூர் போலீஸ் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சியில் கஞ்சா பதுக்கிய ஐ.ஜே.கே. பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- 1150 கிராம் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
திருச்சி,
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் (வயது 53). இவர் திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மீது ஏற்க னவே கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைதான அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் மீண்டும் கஞ்சா விற்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்- இன்ஸ்பெக்டர் வினோ த் மற்றும் போலீசார் கெம்ஸ் டவுன் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது குணா 1150 கிராம் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடி க்கப்பட்டது.இதை அடுத்து போலீசார் குணசேகரனை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடை த்தனர். அவரிடமிருந்து ரூ. 850 ரொக்க பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா பதுக்கிய வழக்கில் ஐ ஜே கே பிரமுகர் கைது செய்ய ப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






