என் மலர்
திருச்சிராப்பள்ளி
திருச்சி,
திருச்சி காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் பால நாராயணன் (வயது 30). பால் வியாபாரி.
இவர் கடந்த சில ஆண்டுகளாக திருமணம் செய்ய மணப்பெண் தேடி வந்தார். ஆனால் திருமணம் கைகூடவில்லை. இந்த கவலையில் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலநாராயணன் குடிபோதையில் அரளி விதையை அரைத்து குடித்தார். பின்னர் பெற்றோர்கள் அவரை மீட்டு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் பாலநாராயணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாயார் சிவ பாக்கியம் காட்டுப்புத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முசிறி அருகேபோலி தங்க நகை கொடுத்து பணம் கேட்ட முதியவர் கைது
- முதியவர் ஒருவர் மோதிரத்தை வைத்துக்கொண்டு பணம் கேட்டுள்ளார்
முசிறி, 1-
முசிறி அருகே உள்ள தும்பலம் குடித்தெவை சேர்ந்த வர் நித்தியானந்தம் ( வயது 37). இவர் தங்க நகை அடகு பிடிக்கும் கடை வைத்திருக்கிறார்.இந்நிலையில் இவரும் இவரது கடையில் வேலை பார்க்கும் விஜயலட்சுமி என்பவரும் கடையில் இருந்த போது, முதியவர் ஒருவர் மோதிரத்தை வைத்துக்கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது மோதிரத்தை பெற்றுக்கொண்டு சோதித்த நித்தியானந்தம் மோதிரம் போலியானது என்பது தெரிய வந்தது. உடனே அவர் தனது சங்க உறுப்பினர்கள் மற்றும் முசிறி போலீஸ் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் முசிறி போலீசார் முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (72) என்பது தெரிய வந்தது. இவர் பல்வேறு இடங்களில் போலி நகையினை வைத்து பணம் பெற்றவர் என கூறப்படுகிறது. முதியவர் ராஜாராமை கைது செய்த போலீசார் ,அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் கொசவம்பட்டியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தோளூர்பட்டியில் 7 நாட்கள் நடைபெறுகிறது.
தொடக்க நிகழ்ச்சியில் முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் நல்லதம்பி தொடங்கி வைத்தார். உதவிதலைமை ஆசிரியர் பழனியப்பன், பள்ளி முதுகலை ஆசிரியர் சுரேஷ் குமார், தோளூர்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி, ராம்கி, பழனியம்மாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 25 பேர் 7 நாட்களில் தோளூர்பட்டி பள்ளி வளாகம் மற்றும் கோவில் வளாகம் உட்பிரகாரம் மற்றும் வாரச்சந்தை அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்தனர். தோளூர்பட்டி ஏரிக்கரையில், அமிர்தம் குளம், தோளூர்பட்டிக்கு வடக்கில் அமைந்துள்ள குட்டை ஆகிய இடங்களில் 5500- க்கும் மேற்பட்ட பனைமர விதைகளை விதைத்தனர். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் பள்ளி முதுகலை ஆசிரியருமான கேசவமூர்த்தி செய்து வருகிறார்.
- தொட்டியம் அருகேகாட்டுப்புத்தூரில் புதிய பயணியர் நிழற் கூடம்
- வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தொட்டியம்
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர்- ஆண்டாபுரம் சாலையில் காந்தி நகரில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற் கூடத்தை முசிறி எம்.எல்.ஏவும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந. தியாகராஜன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவர் சுதாசிவசெல்வராஜ், முன்னாள் துணைத் துணைத் தலைவரும் தி.மு.க. வடக்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவருமான கே. எம்.சிவசெல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் கோகிலாகண்ணதாசன், மாவட்ட பிரதிநிதிகள் பெரியண்ணன், சதீஸ்வரன், ஒன்றிய பிரதிநிதி பாலு, ராம்குமார், நகர அவைத் தலைவர் முருகேசன்,துணைச் செயலாளர்கள் மணிவேல், பூபதி, ஆசைத்தம்பி, உள்பட பலர் முன்னிலை வகித்தனர். புதிய பயணியர் நிழற் கூடத்தை திறந்து வைத்து தியாகராஜன் எம்.எல்.ஏ பேசினார். இதில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி அனைத்து வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- திருச்சியில்லாட்டரி விற்ற 3 பேர் கைது
- இரு சக்கர வாகனம் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி.
திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரக்கத்துக்கு உட்பட்ட கொடாப்புரோடு, குழுமணி ரோடு பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லாட்டரி விற்றதாக வெங்கடாசலம், சங்கர், ரகு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், இரு சக்கர வாகனம் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
- திருச்சி சங்கிலியாண்டபுரம்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
- உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி
திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் வள்ளுவன் (வயது 45 ). இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 நாட்களாக வீட்டில் இருந்தார். .தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த வள்ளுவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வள்ளுவன் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு கம்பியில் வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது மகன் உதய பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
- திருச்சி ஏர்போர்ட்டில்கடத்தி வரப்பட்ட அரிய வகை அணில் தப்பி ஓட்டம்
- வனத்துறையினர் தீவிர தேடும் பணி
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த கைப்பையில் உயிருடன் நகரும் பொருள் இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அவரது கைப்பையை சோதனை செய்த போது, அதில் மலேசியாவில் இருந்து அரிய வகை அணில் இரண்டு எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அரிய வகை அணிலை கைப்பையில் எடுத்து வந்தது மலேசியாவை சேர்ந்த, விஜயலட்சுமி என்பது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் வருவதற்கு முன்பாக, அந்த அணில்கள் தப்பி ஒடின. அணிகளை பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முயற்சித்த போது, ஒருவரின் கையை கடித்து குதறியது. இதனால் அவர் அலறி துடித்தார். காயம் பட்ட அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் விமான நிலையம் வந்து சேர்ந்த வனத்துறையினர் அணிலை தேடி அலைந்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம்அங்குலமாக தேடி வருகின்றனர். தப்பி ஓடிய அணிலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
திருச்சி.
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி ஆலிஸ் மேரி (வயது 57) இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
எனது கணவர் ராஜசேகர் கடந்த 2019- ம் ஆண்டு இறந்து விட்டார். எனக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். மேற்கண்ட முகவரியில் வீடும் 2 கடைகளும் உள்ளது. அதனை எனது மகள் வழிபேரன் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளோம். அந்தக் கடையில் ஒருவர் வாடகைக்கு இருந்தார். பின்னர் முன் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடையை ஒப்படைத்து விட்டார். இந்த நிலையில் சிலர் கடையை சட்டத்துக்கு புறம்பாக திறக்க முயற்சி செய்து வருகிறார்கள். தட்டிக் கேட்டபோது என்னை 3 பேர் தாக்கினார்கள். இது தொடர்பாக தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து 3 பேர் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
- 50 பேர் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு புகார் அளிக்க வந்தனர்.
கே.கே. நகர்,
திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியும், பிளக்ஸ் பேனர் வைத்தும், சுவர்களில் எழுதியும் அ.தி.மு.க.வினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிதது வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி மாநகர் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமையில் திருச்சி விமான நிலையத்தின் எதிரில் உள்ள அரசு சுகாதாரத்துறை பணிமனை வளாக சுவற்றில் வாழ்த்து தெரிவித்து அ.தி.மு.க. வினரால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு, பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி பெயர் மட்டும் சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 65-வது வார்டு அ.தி.மு.க. வட்ட செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் சுமார் 50 பேர் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காவல்துறையினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அ.தி.மு.க.வின் இந்த திடீர் போராட்டம் காரணமாக ஏர்போர்ட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- பொன்மலையில் பரபரப்பு சம்பவம்
- ரயில்வே குடியிருப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
- போலீசார் விசாரணை
திருச்சி
திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண் அற்புதராஜ் (வயது 22).திருமணமாகதவர். இவர் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மற்றும் கட்டிடம் இடிக்கும் பணிகளை செய்து வந்தார்.மேலும் இவர் போதை பழகத்திற்கு அடிமை யானவர் என்று கூறப்படுகிறது. இவர் வீட்டில் தாயிடம் கோபித்து கொண்டு பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதி கட்டிடத்தில் இரும்பு கூரையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சி சங்கிலியாண்ட புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் (54)திருமணம் ஆகாத இவர் சில நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் குளியல் அறையில் இருந்த ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லாரன்ஸ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மளிகை வியாபாரியிடம் ரூ.37 லட்சம் கொள்ளை சம்பவம்
- போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடிக்கு காலில் முறிவு
- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருச்சி.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வரும் வியாபாரி கடை ஊழியர்களிடம் ரூ. 37 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்த கொடுத்து அனுப்பினார்.ஊழியர்கள் ஒரு ஆட்டோவில் பணத்தை எடுத்து கொண்டு தலைமை தபால் நிலையம் அருகே சென்றபோது அரிவாள் முனையில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இதுதொடர்பாக திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரை சேர்ந்த இளையராஜா மனைவி சூர்யா, வரகனேரி பகுதியை சேர்ந்த அன்சாரி, காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் ஆகிய 3 பேர் கைது செய்தனர். இதையடுத்து சூர்யாவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் குற்றவாளிகளை கைது செய்ய கோரி வியாபாரிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருச்சி காட்டூர்ரை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் கடந்த 19-ந் தேதி சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த பணம் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பகுதியை சேர்ந்த ரவுடிமிட்டாய் பாபு என்பவருக்கும் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து கண்டோன்மென்ட் போலீசார்மிட்டாய் பாபுவை தேடி வந்தனர்.இந்த நிலையில் போலீஸ் விடியில் இருந்து தப்பிக்க மிட்டாய் பாபு நேற்று மாலை திருச்சியில் இருந்து மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருடைய கால் முறிந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர், இந்த தகவலின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மிட்டாய் பாபுவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கண்டோன்மெண்ட் போலீசார் மிட்டாய் பாபுவிடம் பணம் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பைப் திருட்டு
- பைப் திருடிய ஆசாமி கைது
திருச்சி.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறுவை சிகிச்சை வார்டில் கை கழுவும் அறையில் இருந்த குழாயை மர்ம ஆசாமி ஒருவர் திருடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பது தெரிய வந்தது.இதை தொடர்ந்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் கைது செய்தனர்.






