என் மலர்
உள்ளூர் செய்திகள்

மளிகை வியாபாரியிடம் ரூ.37 லட்சம் கொள்ளை சம்பவம் போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடிக்கு காலில் முறிவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
- மளிகை வியாபாரியிடம் ரூ.37 லட்சம் கொள்ளை சம்பவம்
- போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடிக்கு காலில் முறிவு
- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருச்சி.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வரும் வியாபாரி கடை ஊழியர்களிடம் ரூ. 37 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்த கொடுத்து அனுப்பினார்.ஊழியர்கள் ஒரு ஆட்டோவில் பணத்தை எடுத்து கொண்டு தலைமை தபால் நிலையம் அருகே சென்றபோது அரிவாள் முனையில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இதுதொடர்பாக திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரை சேர்ந்த இளையராஜா மனைவி சூர்யா, வரகனேரி பகுதியை சேர்ந்த அன்சாரி, காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் ஆகிய 3 பேர் கைது செய்தனர். இதையடுத்து சூர்யாவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் குற்றவாளிகளை கைது செய்ய கோரி வியாபாரிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருச்சி காட்டூர்ரை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் கடந்த 19-ந் தேதி சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த பணம் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பகுதியை சேர்ந்த ரவுடிமிட்டாய் பாபு என்பவருக்கும் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து கண்டோன்மென்ட் போலீசார்மிட்டாய் பாபுவை தேடி வந்தனர்.இந்த நிலையில் போலீஸ் விடியில் இருந்து தப்பிக்க மிட்டாய் பாபு நேற்று மாலை திருச்சியில் இருந்து மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருடைய கால் முறிந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர், இந்த தகவலின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மிட்டாய் பாபுவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கண்டோன்மெண்ட் போலீசார் மிட்டாய் பாபுவிடம் பணம் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






