என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுப்புத்தூரில் புதிய பயணியர் நிழற் கூடம்
    X

    காட்டுப்புத்தூரில் புதிய பயணியர் நிழற் கூடம்

    • தொட்டியம் அருகேகாட்டுப்புத்தூரில் புதிய பயணியர் நிழற் கூடம்
    • வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொட்டியம்

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர்- ஆண்டாபுரம் சாலையில் காந்தி நகரில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற் கூடத்தை முசிறி எம்.எல்.ஏவும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந. தியாகராஜன் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவர் சுதாசிவசெல்வராஜ், முன்னாள் துணைத் துணைத் தலைவரும் தி.மு.க. வடக்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவருமான கே. எம்.சிவசெல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் கோகிலாகண்ணதாசன், மாவட்ட பிரதிநிதிகள் பெரியண்ணன், சதீஸ்வரன், ஒன்றிய பிரதிநிதி பாலு, ராம்குமார், நகர அவைத் தலைவர் முருகேசன்,துணைச் செயலாளர்கள் மணிவேல், பூபதி, ஆசைத்தம்பி, உள்பட பலர் முன்னிலை வகித்தனர். புதிய பயணியர் நிழற் கூடத்தை திறந்து வைத்து தியாகராஜன் எம்.எல்.ஏ பேசினார். இதில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி அனைத்து வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×