என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • நவல்பட்டு அருகே திருமணமான 2 மாதத்தில் ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் திடீர் மாயமானார்
    • கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

    திருச்சி,

    திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 28). இவருக்கும் நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவமனையில் உதவி நர்சாக பணியாற்றி வரும் ஷர்மிளா தேவி (21) என்பவருக்கும் கடந்த மே 22ந் தேதி திருமணம் நடந்தது.பின்னர் புதுமண தம்பதிகள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். கணவர் வீட்டில் இருந்து ஷர்மிளாதேவி தினமும் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.பின்னர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மிளா தேவியை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்று விட்டார்களா? அல்லது காதல் விவகாரத்தில் கணவரை தவிக்க விட்டு ஓட்டம் பிடித்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரவிந்த் மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
    • திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 28). இவருக்கும் நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவமனையில் உதவி நர்சாக பணியாற்றி வரும் ஷர்மிளா தேவி (21) என்பவருக்கும் கடந்த மே 22ந் தேதி திருமணம் நடந்தது.

    பின்னர் புதுமண தம்பதிகள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். கணவர் வீட்டில் இருந்து ஷர்மிளாதேவி தினமும் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

    பின்னர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மிளா தேவியை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்று விட்டார்களா? அல்லது காதல் விவகாரத்தில் கணவரை தவிக்க விட்டு ஓட்டம் பிடித்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவெறும்பூர் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பெல் ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • மரம் வெட்டிய தகராறில் சாதி பெயரை சொல்லி திட்டியதாக குற்றச்சாட்டு

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் ஏ செக்டாரில் வசிப்பர் சுரேஷ். இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (32).இவரது வீட்டின் அருகே வசிப்பவர் பாண்டி மணிகண்டன் (38). இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.

    பாண்டி மணிகண்டன் வீட்டிலுள்ள புளிய மரக் கிளை சுரேஷ் வீட்டின் பக்கம் வந்துள்ளது. இதை வெட்டக் கோரி சுரேஷ் பலமுறை கூறியும் பாண்டி மணிகண்டன் வெட்டாததால் சுரேஷ் அந்த கிளையை வெட்டியுள்ளார். இதனால் இரு குடும்பங்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் பாண்டி மணிகண்டன், சித்ராவையும், சுரேஷையும் சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறுத்து சித்ரா பெல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாண்டிமணிகண்டனை கைது செய்து திருச்சி 6-வது நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • லால்குடி பகுதியல் கிரைண்டரில் மாவு அரைத்த போது மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்
    • லால்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை மலையப்பபுரத்தை சேர்ந்தவர் மணி. மனைவி பவானி (வயது 51). இவர், வீட்டில் கிரைண்டரில் மாவு அதை்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக கிரைண்டர் வழியாக மின்சாரம் இவர் மீது பாய்ந்தது. இதில் பவானி தூக்கி வீசப்பட்டார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பவானியை மீட்டு லால்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பவானி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் துப்புரவு பணியாளர்கள் கூலி உயர்வு கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • அமைச்சர் கே.என். நேரு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலத்தில் தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் 150 பேரை பணியில் அமர்த்தி உள்ளனர். துப்புரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தினக்கூலியாக ரூ. 570 தருவதாக கூறி ரூ.430 மட்டுமே வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்காமல் இருந்து வந்தனர். இதனை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை திருச்சி அண்ணா சிலை அருகே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.அப்பொழுது அந்த வழியே லால்குடிக்கு காரில் சென்ற அமைச்சர் கே.என்.நேரு, போராட்டத்தில் ஈடுபட்டோரை கண்டு, காரில் இருந்து இறங்கி வந்தார். பிறகு அங்கு திரண்டு இருந்த துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது உங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் வாக்குறுதி அளித்தன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் 5-அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
    • ரெயில்வே ஜங்ஷனிலும் தீவிர சோதனை நடைபெறுகிறது

    கே.கே. நகர்,

    நாடுமுழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.இதையடுத்து பாதுகாப்பு பணிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.திருச்சி விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள், ெவளியே செல்லும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.விமான நிலையத்தின் நுழைவாயிலில் தமிழக போலீசாரின் சோதனை நடைபெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகனங்கள் நிற்கும் இடத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு அடுத்தபடியாக விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது உடமைகளை பிரித்து சோதனை செய்யும் நிலை இருந்து வருகிறது.மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்பு முனைய வளாகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். இந்த சோதனையானது நேற்று இரவு தொடங்கியது. நாளை மற்றும் நாளை மறுநாள் வரை (16 -ந் தேதி) வரை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.இந்த சோதனை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை காலை 9 மணி அளவில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்ற இருக்கின்றார்.இதே போன்று திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கும் பயணிகள் உடைமைகள் மெட்டல் டிடக்டர் கருவிகள் மூலம் சோதனைக்குள்ளாக்கப்படுகிறது. இதில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையம், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள், பேத்தி தீக்குளிக்க முயற்சி செய்தனர்
    • பாதுகாப்பு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்

    திருச்சி,

    திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதை.தொடர்ந்து வழக்கம் போல் நுழைவாயில் பகுதியில் போலீசார் மனுதாரர்களை சோதனைக்கு உட்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர்.இருந்த போதிலும் போலீசின் கண்ணில் சிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் சென்றனர். பின்னர் கலெக்டர் கார் நிறுத்தப்படும் பகுதியில் நின்று கொண்டு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 3 பேரையும் மீட்டு விசாரித்தனர். விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர்கள் திருச்சி முசிறி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி பாப்பாத்தி (வயது 65)அவரது மகள் மாலதி( 40 )பேத்தி ஹரிப்பிரியா( 8 )என்பது தெரியவந்தது.இவர்களுக்கு சொந்தமான வீட்டை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.இதற்கு நீதி கேட்டு வருவாய்த்துறை அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் எந்த தீர்வும் காணப்படவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது

    • 13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
    • நகராட்சிகளை பொறுத்தமட்டில் ராமேசுவரம் முதலிடத்தையும், திருத்துறைப்பூண்டி 2-வது இடத்தையும், மன்னார்குடி 3-வது இடத்தையும் பிடித்தது.

    திருச்சி:

    தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும், நகராட்சியை பொறுத்தமட்டில் முதலிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

    பேரூராட்சியை பொறுத்தமட்டில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மண்டலங்களுக்கு தலா ரூ.30 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்காக 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.

    அதன்படி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தையும், தாம்பரம் மாநகராட்சி 2-ம் இடத்தையும் பிடித்தது.

    நகராட்சிகளை பொறுத்தமட்டில் ராமேசுவரம் முதலிடத்தையும், திருத்துறைப்பூண்டி 2-வது இடத்தையும், மன்னார்குடி 3-வது இடத்தையும் பிடித்தது.

    பேரூராட்சியை பொறுத்தமட்டில் விக்கிரவாண்டி முதலிடத்தையும், ஆலங்குடி 2-வது இடத்தையும், வீரக்கால்புதூர் 3-வது இடத்தையும் பெற்றது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களில் 9-வது மண்டலம் முதலிடத்தையும், 5-வது மண்டலம் 2-வது இடத்தையும் பிடித்தது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை மாநகராட்சிகளின் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களிடம் வழங்க உள்ளார்.

    • திருச்சி விமான நிலையத்தில் 8 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
    • சிங்கப்பூருக்கு கடத்த இருந்த நிலையில் வாலிபரிடம் இருந்து பறிமுதல்

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமாங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் சமீப காலாமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகள் வெளிநாட்டு கரன்சி, அமெரிக்க டாலர், அரிய வகை உயிரினங்கள் ஆகியவற்றை கடத்தி செல்வதற்காக எடுத்து வருகின்றனர்.இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணம் செய்யும் பயணிகளை மத்திய வருவாய் நண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது மதுரையை சேர்ந்த கண்ணன் என்ற பயணி சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரது கைப்பையில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து கண்ணனை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கண்ணனிடம் தொடர்ந்து விசாரண நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    திருச்சி,

    திருச்சி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கவும்,தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அதன்படி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ரவிக்குமார் (வயது 61) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர்.இதே போன்று பாலக்கரை பகுதி பீமநகர் பொது கழிப்பிடம் அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த கோரிமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (24)என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பட்டவரத் ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மேல சிந்தாமணி பகுதியில் சேர்ந்த சிவகுரு (22) என்ற வாலிபரை கோட்டை போலீஸ் கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர்.தில்லைநகர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சிவா ( 22)என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். உறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட புத்தூர் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பிரபாகரன் (43) என்பவரை ஒரே ஒரு போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    • மணல் குவாரி கேசியர் மீது மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்

    மண்ணச்சநல்லூர்,

    புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி காரைக்கோட்டை பகுதியை ேசர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர், திருச்சி மாவட்டம் கிளிக்கூடு மணல் குவாரியில் காசா ளராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் மணல் குவாரியில் வசூலான பணத்துடன் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு திருச்சி நோக்கி சென்றுகொ ண்டிருந்தார்.உத்தமர்சீலி மேலவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் 2 பேர் மணிகண்டன் சென்ற வாகனத்தில் மோதினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென மணிகண்டன் முகத்தில் மிளகாய் பொடி ைய தூவி, அவர் வைத்திருந்த ரூ.8 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் மணி கண்டன் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு ள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்திவந்தனர்.இந்த நிலையில் இன்று திணேஷ் குமார், பாலாஜி, ரஞ்சித், பிரேம்குமார், மணிகண்டன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணல் கடத்தல் விவகாரத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது
    • 2 பேருக்கு அரிவாள் வெட்டு, 8 பேர் கைது

    மண்ணச்சல்லூர்,

    திருச்சி மாவட்டம் கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடியைச் சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் தட்டி கேட்டனர். இதில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கும், ஊர்காரர்களுக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.இரு தினங்களுக்கு முன்பு தாளக்குடி பஜனை மடத்தெருவை சேர்ந்த கு பழனி (வயது 29), கீரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை (28), பரந்தாமன் (22) ஆகியோர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி சமயபுரம் அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெரு வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை சிலர் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர்.இதையடுத்து பரந்தாமன், குமார், ராஜா உள்ளிட்ட சிலர் கையில் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையுடன் அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவுக்குள் நுழைந்தனர்.இதனை கண்ட எதிர்தரப்பை சேர்ந்த சுரேஷ், மித்ரன் உள்ளிட்ட சிலர் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் தொடுத்தனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் பரந்தாமன் தரப்பினர் சுரேஷ் மற்றும் மித்ரனை அரிவாளால் வெட்டி அவர்களது வீட்டையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் தனியார் பள்ளி பஸ் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சுரேஷ், மித்ரன், புறாமணி ஆகியோரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.அங்கு மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.இது தொடர்பாக சமயபுரம் போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து பரந்தாமன் (26), தாளக்குடி பஜனை மடத் தெரு புறாமணிக்கண்டன் (31), லால்குடி தாளக்குடி முத்தமிழ்நகர் அப்பாஸ்(25), தாளக்குடி நெப்போலியன் (27), கீரமங்கலம் மாரியம்மன் ே காவில் தெரு ராஜதுரை ஆகிய 5 பேரையும், சுரேஷ் தரப்பில் தாளக்குடி வலக்கோட்டை வேல்முருகன்(27), பிச்சாண்டார் கோவில் மணிகண்டன் (27), தாளக்குடி வடக்கு தெரு மோகன் குமார் (25) ஆகிய 8 பேரை கைது செய்துள்ளனர்.நாட்டு வெடிகுண்டு வீசி இருதரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×