என் மலர்tooltip icon

    தேனி

    • டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • தனது மனைவியை வீட்டில் விட்டு விட்டு சின்னத்துரை திருப்பூர் செல்வதற்காக மூன்றாந்தல் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது32). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருப்பூரில் தங்கி இருந்த தம்பதியினர் தலை ஆடிக்காக பெரியகுளம் வந்தனர்.

    பின்னர் தனது மனைவியை வீட்டில் விட்டு விட்டு சின்னத்துரை திருப்பூர் செல்வதற்காக மூன்றாந்தல் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தாமரைக்குளம் பிரிவு அருகே வழிமறித்து சின்னத்துரையை பைக்கில் ஏறுமாறு கூறினர்.

    அதற்கு அவர் மறுக்கவே கத்தியை காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி சனீஸ்வர பகவானுக்கும், கும்பத்தில் காட்சியளிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
    • 5-வது வார திருவிழாவான 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் வருகிற 4-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த கோவிலில் ஆடி மாதத்தில் 5 வார திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன்படி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி சனீஸ்வர பகவானுக்கும், கும்பத்தில் காட்சியளிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். இதில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து 3-ம் வார திருவிழாவில் சாமிக்கு சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல், சுவாமி வீதி உலா, லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    மேலும் வருகிற 12-ந் தேதி 4-வது வார சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 14-ந் தேதி இரவு பொங்கல் வைத்து சோனை கருப்பணசாமிக்கு மதுபான படையல் பூஜை நடைபெறுகிறது.

    அன்று இரவு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடு, சேவல் பலியிட்டு கறி விருந்து நடைபெறும். பிறகு 5-வது வார திருவிழாவான 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    • தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் திணறி வந்தார்.
    • இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவர் காசுக்கடை சந்தில் உள்ள பஜாரில் நகை கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தொழில் சம்மந்தமாக வெளியில் அதிக அளவில் கடன் வாங்கி இருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் திணறி வந்தார்.

    மேலும் குடும்பத்தில் பிரச்சினை இருந்ததால் மன உளைச்சலில் காணப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்றனர்.
    • தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத்தேர்வில் 3:1 என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

    கம்பம்:

    கால்நடை பராமரிப்புத்துறையில் கடந்த 2012-ம் ஆண்டு 747 கால்நடை டாக்டர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். 12 ஆண்டுகளாக பணியாற்றிய இவர்களில் 294 பேர் பணியை நிரந்தரம் செய்யாததால் ராஜினாமா செய்துவிட்டனர்.

    மற்ற 454 டாக்டர்கள் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தற்காலிகமாக பணியாற்றி வரும் 454 டாக்டர்கள் பணியிடங்களையும் காலி இடங்களாக அறிவித்தது. இதனால் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கால்நடை டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோது டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதுமாறும், 454 பேர்களுக்கும் கருணை அடிப்படையில் 50 மதிப்பெ ண்கள் வழங்கப்படும் என கால்நடைத்துறை இயக்குனரகம் தெரிவித்தது.

    இதை கண்டித்து கால்நடை டாக்டர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். பின்னர் வேறு வழியின்றி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்றனர்.

    இதில் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 13 டாக்டர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் பலர் தமிழ் தேர்வில்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வில் வெற்றி பெ ற்றாலும் நேர்முகத்தேர்வில் 3:1 என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

    அதில் தங்களுக்கு பணியிடம் நிரந்தரமாக்கப்படுமா? என கால்நடை டாக்டர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

    • வாகனத்துக்கு பதிவெண் வாங்குவதற்காக மோட்டார் ைசக்கிளில் திண்டுக்கல் - குமுளி பைபாஸ் சாலையில் சென்றார்.
    • பொம்மைய கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.

    தேனி:

    உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 24). இவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். புதிய பைக் வாங்கி டி.வாடிப்பட்டியில் வைத்திருந்தார்.

    இந்த வாகனத்துக்கு பதிவெண் வாங்குவதற்காக மோட்டார் ைசக்கிளில் திண்டுக்கல் - குமுளி பைபாஸ் சாலையில் சென்றார். பொம்மைய கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அழகர்ராஜா தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இந்த ஆண்டு தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.02 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கியபோதும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயராமல் உள்ளது.

    வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக போதிய அளவு நீர்மட்டம் இருந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.02 அடியாக உள்ளது. வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக உள்ளது. 404 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.88 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • வருசநாடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஞ்சந்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தேங்காய், கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு ஆகியவற்றின் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஞ்சந்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.

    விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வருசநாடு கிராமத்தில் அமைந்துள்ள பஞ்சந்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அதன் பின்னர் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நீர் தேக்கி வைக்க வழிவகை செய்ய வேண்டும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிங்கராஜபுரம்-அரண்மனைபுதூர், வருசநாடு-வாலிப்பாறை ஆகிய தார் சாலைகளை சீரமைக்க வேண்டும், தேங்காய், கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு ஆகியவற்றின் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,

    புலிகள் சரணாலயம் என்ற பெயரில் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து தடுத்து வரும் வனத்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ், பாரதி, பாண்டி, ராஜாராம், புயல் மன்னன், பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் உள்ள நிரந்தர முகவரியை வைத்து ரேசன் பொருட்கள் மற்றும் கல்வி, வருவாய்த்துறை திட்டங்களில் பயன் அடைந்து வருகின்றனர். சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • எனவே இரு மாவட்ட நிர்வாகமும் இரட்டை குடியுரிமையை ரத்து செய்து ஏதாவது ஒரு இடத்தில் வாக்களிக்க முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கேரள எல்லை அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டத்துக்கு ஏராளமான தமிழக தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

    சின்னமனூர், கம்பம், அய்யம்பட்டி, தர்மத்து ப்பட்டி, பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி, குரங்கணி, கொட்டக்குடி, முந்தல் பகுதியில் இருந்து ஜீப் மூலம் ஏலக்காய் தோட்டத்துக்கு தினசரி தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும் நிரந்தர தொழி லாளர்கள் கேரளாவில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நிரந்தர முகவரியை வைத்து ரேசன் பொருட்கள் மற்றும் கல்வி, வருவாய்த்து றை திட்டங்களில் பயன் அடைந்து வருகின்றனர். சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.

    எனவே இரு மாவட்ட நிர்வாகமும் இரட்டை குடியுரிமையை ரத்து செய்து ஏதாவது ஒரு இடத்தில் வாக்களிக்க முகாம்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    2 கட்டமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. எனவே கேரள தோட்ட தொழிலாளர்கள் விடுப்பு எடுத்து தமிழகம் வருகின்றனர். அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தை பெற்று ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேனிக்கு வருகின்றனர். இந்த திட்டம் கீழ்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்திரும்பி முகாம்களில் விண்ண ப்பித்து வருகின்றனர். அதிகாரிகள் இதில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விஜயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாக தெரிவித்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த சித்ரா தன்னை ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு தனது வக்கீலுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சித்ரா (வயது21). தனியார் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வாத்து என்ற விஜய் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கடந்த 5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். சித்ராவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பல்வேறு கட்டங்களாக பணம், நகையை வாங்கி உள்ளார். இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் ரூ.2 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு தேனி சென்று வருவதாக கூறிய விஜய் அதன் பின்னர் இவரை சந்திப்பதை தவிர்த்துள்ளார். செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. விஜயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா தன்னை ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு தனது வக்கீல் ஜகன்ராஜூவுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

    போலீசார் அவரை சமரசம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டார். இது தொடர்பாக விஜய் அவரது தாய் தமிழ்ச்செல்வி, உறவினர் லதா உள்பட 5 பேர் மீதுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கம்பம் மெட்டு மலைச்சாலையில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தினர் கார்பனேட் உள்ளிட்ட அரியவகை கனிம உலோகங்கள் இருப்பதாக செயற்கைகோள் மூலம் கண்டறிந்தனர்.
    • இதற்காக வனப்பகுதியில் சுமார் 2 ச.கி.மீ. பரப்பளவில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வன சரகம் கம்பம் மெட்டு மலைச்சாலையில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தினர் கார்பனேட் உள்ளிட்ட அரியவகை கனிம உலோகங்கள் இருப்பதாக செயற்கைகோள் மூலம் கண்டறிந்தனர்.

    இதற்காக வனப்பகுதியில் சுமார் 2 ச.கி.மீ. பரப்பளவில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர். இந்த ஆய்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்.காட்சிகண்ணன் கூறியதாவது:-

    ஏற்கனவே பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகம் அமைத்து சர்ச்சை வெடித்து வருகிறது. அதனுடைய ெதாடர்ச்சியாக இந்திய புவியியல் ஆய்வு மையம் அரிய உலோகங்களை கண்டு பிடிப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு உள்ளது. ஆழ்துளை கிணறு அமைப்பது கம்பம் பகுதியை வறட்சியாக்கி நீர்வளத்ைத பாதிக்கும். ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணையில் கேரளா தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புவியியல் ஆய்வு மக்களிடையே அச்சத்ைத ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கேரள எல்லை அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டத்துக்கு ஏராளமான தமிழக தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

    சின்னமனூர், கம்பம், அய்யம்பட்டி, தர்மத்துப்பட்டி, பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி, குரங்கணி, கொட்டக்குடி, முந்தல் பகுதியில் இருந்து ஜீப் மூலம் ஏலக்காய் தோட்டத்துக்கு தினசரி தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும் நிரந்தர தொழிலாளர்கள் கேரளாவில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நிரந்தர முகவரியை வைத்து ரேசன் பொருட்கள் மற்றும் கல்வி, வருவாய்த்துறை திட்டங்களில் பயன் அடைந்து வருகின்றனர். சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.

    எனவே இருமாவட்ட நிர்வாகமும் இரட்டை குடியுரிமையை ரத்து செய்து ஏதாவது ஒரு இடத்தில் வாக்களிக்க முகாம்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    2 கட்டமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. எனவே கேரள தோட்ட தொழிலாளர்கள் விடுப்பு எடுத்து தமிழகம் வருகின்றனர். அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தை பெற்று ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேனிக்கு வருகின்றனர். இந்த திட்டம் கீழ்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்திரும்பி முகாம்களில் விண்ணப்பித்து வருகின்றனர். அதிகாரிகள் இதில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக சென்றார்.
    • அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த சேகர் மனைவி தமிழரசி (வயது 23). இவர்களுக்கு ரக்ஷனா என்ற மகளும், ரட்சகன் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று 4-வது வார்டு மாதா கோவில் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் தமிழரசி இருந்தார்.

    அப்போது தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக ரட்சகனுடன் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தமிழரசியின் தாய் வேளாங்கண்னி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×