என் மலர்
நீங்கள் தேடியது "கனிம உலோகங்கள்"
- கம்பம் மெட்டு மலைச்சாலையில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தினர் கார்பனேட் உள்ளிட்ட அரியவகை கனிம உலோகங்கள் இருப்பதாக செயற்கைகோள் மூலம் கண்டறிந்தனர்.
- இதற்காக வனப்பகுதியில் சுமார் 2 ச.கி.மீ. பரப்பளவில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வன சரகம் கம்பம் மெட்டு மலைச்சாலையில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தினர் கார்பனேட் உள்ளிட்ட அரியவகை கனிம உலோகங்கள் இருப்பதாக செயற்கைகோள் மூலம் கண்டறிந்தனர்.
இதற்காக வனப்பகுதியில் சுமார் 2 ச.கி.மீ. பரப்பளவில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர். இந்த ஆய்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்.காட்சிகண்ணன் கூறியதாவது:-
ஏற்கனவே பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகம் அமைத்து சர்ச்சை வெடித்து வருகிறது. அதனுடைய ெதாடர்ச்சியாக இந்திய புவியியல் ஆய்வு மையம் அரிய உலோகங்களை கண்டு பிடிப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு உள்ளது. ஆழ்துளை கிணறு அமைப்பது கம்பம் பகுதியை வறட்சியாக்கி நீர்வளத்ைத பாதிக்கும். ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணையில் கேரளா தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புவியியல் ஆய்வு மக்களிடையே அச்சத்ைத ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






