என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
வருசநாடு கிராமத்தில் பஞ்சந்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
- வருசநாடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஞ்சந்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தேங்காய், கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு ஆகியவற்றின் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஞ்சந்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.
விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வருசநாடு கிராமத்தில் அமைந்துள்ள பஞ்சந்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அதன் பின்னர் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நீர் தேக்கி வைக்க வழிவகை செய்ய வேண்டும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிங்கராஜபுரம்-அரண்மனைபுதூர், வருசநாடு-வாலிப்பாறை ஆகிய தார் சாலைகளை சீரமைக்க வேண்டும், தேங்காய், கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு ஆகியவற்றின் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,
புலிகள் சரணாலயம் என்ற பெயரில் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து தடுத்து வரும் வனத்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ், பாரதி, பாண்டி, ராஜாராம், புயல் மன்னன், பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






