என் மலர்
தேனி
- இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை 3 நாட்கள் தேனி மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
- 9-ந் தேதி காலை 8 மணி முதல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் செய்கிறார்.
ஆண்டிபட்டி:
என் மண் என் மக்கள் என்ற பிரசாரத்தை வலியுறுத்தி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடைபயணம் செய்கிறார். 2-ம் கட்ட நடைபயணத்தை ஆலங்குளத்தில் தொடங்கிய அவர் நேற்று ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை 3 நாட்கள் தேனி மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 6 மணிக்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வருகை தருகிறார். அங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அண்ணாமலை நாளை காலை கடமலைக்குண்டு, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபயணம் செய்கிறார்.
மாலை 3 மணி முதல் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 6 மணி முதல் போடி சட்டமன்ற தொகுதியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். 9-ந் தேதி காலை 8 மணி முதல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் செய்கிறார்.
அவரது வருகையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை தேனி மாவட்டத்துக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.
- தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- மழைப்பொழிவால் மானாவாரி பயிரிட்ட விவசாயிகளும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டு க்கல், தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்தநிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தேனி, திண்டு க்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி நேற்றுமாலை சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்ட த்துடனே உள்ளது. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்த்து உள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல்சாகுபடி செய்த விவசாயிகள் 2-ம் கட்ட உரம் மற்றும் மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நெற்பயி ர்களில் கதிர் தள்ளும் பருவம் என்பதால் மழை ஏதுவாக இருக்கும். மேலும் மானாவாரி பயிரிட்ட விவசாயிகளும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 515 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உள்ளது. 54 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. 21 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.88 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிற நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
கொடைக்கானலில் பெய்த கனமழையால் கும்ப க்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் வரத்து சீராகி உள்ளதால் அனுமதி அளித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரியாறு 12, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதிஅணை 3, போடி 6.2, மஞ்சளாறு 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- தேனி அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமாகினர்.
- புகாரின்பேரில் மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி அருகே கடமலை க்குண்டுவை சேர்ந்தவர் பெத்தன் மகள் நிவேதா(17). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் சம்பவ த்தன்று வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கடமலை க்குண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நிவே தாவை தேடி வருகின்றனர்.
கம்பத்தை சேர்ந்தவர் பொன்ராம் மகள் ஹரிதாதேவி(20). இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (8ந் தேதி) நடைபெற உள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (8ந் தேதி) நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீலப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
- கும்பல் தாக்கியதில் மயக்க நிலையில் இருந்த வாலிபரை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
- வாலிபரின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பச்சமலையான்கோட்டை இந்திராநகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 60). இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
3-வது மகன் மகாலிங்கம் (வயது 25) என்பவர் பூ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்த ன்று ஜி.கல்லுப்பட்டி புஷ்பராணி நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்தார்.
இது குறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. மயக்க நிலையில் இருந்த மகாலிங்கத்தை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இவரது நண்பர்கள் அனைவரும் சம்பவத்தன்று பிறந்தநாள் விழாவை கொண்டாடுவத ற்காக மது குடித்துக் கொண்டு இருந்ததாகவும், அப்போது அங்கு சென்ற மகாலிங்கம் தனியாக நடந்து சென்றார்.
அப்போது மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களை கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமார் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சப்-இன்ஸ்பெ க்டர் வேல்மணிகண்டன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை குடிநீர் திட்டக்கு ழாய் அமைக்கும் பணிகள் உத்தமபாளையம் முல்லை ப்பெரியாற்றில் மேல் பகுதியில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ள்ளது.
- தற்போது 2ம் கட்ட மாக ஆற்றின் மறு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
உத்தமபாளையம்:
மதுரை குடிநீர் திட்டக்கு ழாய் அமைக்கும் பணிகள் உத்தமபாளையம் முல்லை ப்பெரியாற்றில் மேல் பகுதியில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ள்ளது.
இந்த நிலையில் ஆற்றின் அடுத்த பகுதியில் தூண்கள் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகள் தொடங்கி உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு தினசரி 125 மில்லியன் கன அடி நீர் தண்ணீர் பெறும் வகையில் தேனி மாவட்டம் ேலாயர் கேம்பில் புதிய குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அம்ரூத்-3 என்னும் திட்டத்தில் ரூ.1295.76 கோடி மதிப்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
லோயர்கேம்ப், வண்ணா ந்துரை பகுதியில் தலைமை நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி க்கு கொண்டு செல்லப்படு கிறது. அங்கு நீர் சுத்திகரிக்க ப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்ப ட்டுள்ளது.
தற்போது லோயர்கே ம்ப்பில் இருந்து தப்புக்குண்டு விலக்கு வரை குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் உத்தமபாளையம் பைபாஸ், கண்டமனூர் அருகே அடைக்கம்பட்டி ஆகிய இடங்களில் முல்லைப்பெரி யாற்றின் குறுக்கே தூண்கள் அமைத்து குழாயை அதன் மேல் பதிக்க திட்டமிடப்பட்டு ள்ளது. உத்தமபாளையத்தில் இதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. ஆற்றில் நீரோட்டம் ெதாடர்வதால் ஒரே நேரத்தில் பணிகள் மேற்கொள்ள முடியாது.
எனவே முதல் கட்டமாக நீரோட்டம் மாற்றப்பட்டு அப்பகுதியில் தூண்கள் கட்டப்பட்டன. அங்கு 3 தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் குழாய்களை பதித்து அளவீடு செய்யப்ப ட்டது. தற்போது 2ம் கட்ட மாக ஆற்றின் மறு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. தூண்கள் அமைப்பதற்காக மண் அள்ளும் எந்திரம் மூலம் அஸ்திவாரம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
வெள்ளம் வந்தாலும் குழாய்க்கு பாதிப்பு ஏற்ப டாத வகையில் உயரமாக கட்டப்பட்டு வருகிறது. 5 தூண்களில் 3 தூண்களு க்கான பணிகள் முடிவடை ந்துள்ளது. மீதம் உள்ள 2 தூண்கள் 3 மாதத்தில் கட்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி தேனி மாவட்டத்தில் விரைவில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்த னர்.
- தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது.
- இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.
சின்னமனூர்:
சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி தவமணி. இவர் அதேபகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவருக்கு கிரைய விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இதில் பாதி பணம் கொடுத்துவிட்டு மீதி பணம் தராததால் உத்தமபாளையம் கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது.
இந்த நிலையில் தவமணியை நாகம்மாள், அழகுபிரியா, அழகுராணி, ராஜாராம் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது. இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக தவமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
- மாதாந்திர கடனுதவி வழங்கும் முகாமில் 244 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.20.70 கோடி வங்கி கடன், அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் மாதாந்திர முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் முன்னிலையில் நடை பெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
பெண்களின் கூட்டு முயற்சியில் லாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் அப்பெண்க ளின் குடும்ப வருமானத்தை யும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வறுமையிலிருந்து விடுபடச் செய்வதற்காகவும் மகளிர் திட்டத்தின் மூலம் சுழல்நிதி கடன், பொருளாதார கடன், தொழிற்கடன், வங்கிக் கடன்கள் போன்ற பல்வேறு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இக்கடனுதவி களை பெண்கள் பயன்படு த்தி தங்களது பொருளா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மாதாந்திர கடனுதவி வழங்கும் முகாமில் 244 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.20.70 கோடி வங்கி கடன், அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும் 2023-2024-ஆம் ஆண்டிற்கு 10713 குழுக்களுக்கு ரூ.594 கோடி கடனுதவி வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இன்று வரை 5334 குழுக்களுக்கு ரூ.344.34 கோடி கடனுதவி வழங்கப்ப ட்டுள்ளது. மீதமுள்ள இலக்கினை டிசம்பர் மாத த்திற்குள் எட்டிட நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆபரண நகை தயாரிப்பதற்கு பயிற்சி பெற்ற 30 மாணவிகளுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் சுய தொழில் மேற்கொள்ள ரூ.1,52,000 க்கான வங்கி கடன் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஆரோக்கிய சுகுமார், முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
- மேலும் கிருஷ்ண அவதாரத்தை நினைவுபடுத்தும் வகையில் குழந்தை கிருஷ்ணர் விக்ரகத்திற்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு இன்று சீனிவாசப் பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் கிருஷ்ண அவதாரத்தை நினைவுபடுத்தும் வகையில் குழந்தை கிருஷ்ணர் விக்ரகத்திற்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- போடியில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பி 9 மணிக்கு மதுரை செல்லும் வகையிலும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்கு போடி வரும் வகையில் ஒரு ரெயில் சேவை உருவாக்கப்பட்டால் இம்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் விழாக்கால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்
தேனி:
தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு தேனி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் சங்கரநாராயணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை, மதுரை ரெயிலை போடி வரை நீடித்ததற்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாரத்தில் 3 நாட்கள் போடியில் இருந்தும், 3 நாட்கள் சென்னையில் இருந்தும் இயக்கப்படும் ரெயிலை 7 நாட்களும் சென்னையில் இருந்தும் போடியில் இருந்தும் புறப்பட்டு செல்லும் வகையில் மாற்றம் செய்தால் தேனி மாவட்ட மக்கள் மற்றும் கேரள மக்கள் அதிகம் பயனடைவார்கள்.
போடியில் இருந்து மதுரை செல்லும் ரெயில் மாலை 6 மணிக்கு கிளம்பி 8 மணிக்கு மதுரை செல்கிகிறது. இதனை மாலை 5.30 மணிக்கு கிளம்பி 7.30 மணிக்கு மதுரை செல்லும் வகையில் இயக்கினால் அங்கிருந்து சென்னை, பெங்களூர், மைசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.
போடியில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பி 9 மணிக்கு மதுரை செல்லும் வகையிலும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்கு போடி வரும் வகையில் ஒரு ரெயில் சேவை உருவாக்கப்பட்டால் இம்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
போடி, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் ரிசர்வேஷன் மற்றும் அன்ரிசர்வ்டு பெட்டிகள் எந்த எண் உள்ள பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதற்கான டிஸ்பிளே போர்டு அமைக்கப்படாமல் உள்ளது. இதனை விரைந்து அமைக்க வேண்டும். ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் விழாக்கால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
- முருகனின் தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
- அன்னூர் போலீசார் முருகனின் உடலை தோண்டி எடுத்து உடல்கூறாய்வு செய்ய முடிவு செய்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது36). இவர் கோவை மாவட்டம் அன்னூரில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
இவர் கவிதா (35) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முருகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக கவிதா தனது உறவினர்களுக்கு தெரிவித்தார்.
அதன்பேரில் அவரது உடல் அன்னூரில் இருந்து சாமாண்டிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முருகனின் தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அன்னூர் போலீசார் முருகனின் உடலை தோண்டி எடுத்து உடல்கூறாய்வு செய்ய முடிவு செய்தனர். இதற்காக அன்னூர் போலீசார் கம்பத்திற்கு வந்து அவரது உடலை தோண்டி எடுக்க தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனு கொடுத்தனர். மேலும் உத்தமபாளையம் தாசில்தாரிடமும் மனு அளிக்கப்பட்டது.
அன்னூர் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ்வரன் தலைமையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் மேற்பார்வையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் இன்று முருகனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முருகனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசால் அங்கீகரிக்க ப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்ட விதைகள் தரமற்றதாகவும் தகுதியற்றதாகவும் உள்ளது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- வேளாண்துறை அதிகாரி களிடம் புகார் அளித்த நிலையில் முறையான பதில் கிடைக்காததால் காய்க்காத அவரை செடிகளுடன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
போடி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பா லானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது அவரை சாகுபடி செய்ய ஏற்ற பருவம் என்பதால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பல ஏக்கரில் அவரை பயிரிட்டு விவ சாயம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஏக்கருக்கு 30,000 மேல் செலவு செய்து அவரை பயிரிட்ட நிலையில் செடிகள் எதுவும் பூக்காம லும் காய்கள் பிடிக்காமலும் முதிர்ந்து போனது.
அரசால் அங்கீகரிக்க ப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்ட விதைகள் தரமற்றதாகவும் தகுதியற்றதாகவும் உள்ளது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சம்பந்த ப்பட்ட நிறுவனத்திடமும் வேளாண்துறை அதிகாரி களிடம் புகார் அளித்த நிலையில் முறையான பதில் கிடைக்காததால் காய்க்காத அவரை செடிகளுடன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்தும் அவரை செடிகள் விளைச்சல் கிடைக்காததால் கவலை தெரிவித்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் போலி விதைகள் வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.






