பெரியகுளம் அருகே தம்பதியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

பணம் கொடுக்கல் வாங்கலில் தம்பதியை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே வடகரை வைத்தியநாத புரத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி மனைவி மனோ ன்மணி(37). விவசாயம் செய்து வருகின்றனர். அழகுபாறை, அணைக்கல் பகுதியில் தென்ன ந்தோப்பை அதேபகுதியை சேர்ந்த சசிக்குமார், கற்பகம் ஆகியோருக்கு கிரைய அக்ரிமெண்ட் செய்து கொடுத்தனர்.

இதற்காக ரூ.10 லட்சம் பேசி முன்பணமாக ரூ.7 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி பணத்தை கேட்டபோது பிறகு தருவதாக இழுத்த டித்து வந்தனர். இந்தநிலை யில் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி தோப்பில் இருக்கும் போது கற்பகம், சசிக்குமார் ஆகியோர் அத்துமீறி உள்ளே நுழைந்து அவர்களை தகாத வார்த்தை யால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து ள்ளனர்.

தோப்பின் ஆவணம் எங்களிடம் உள்ளது. இத னால் ஒன்றும் செய்யமுடி யாது எனக்கூறி அவரை தாக்க முயன்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் பெரியகுளம் போலீசார் கற்பகம் மற்றும் சசிக்குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com