பெரியகுளத்தில் நாய்கள் குதறிய நிலையில் கிடந்த ஆண் சடலம்

பஸ்நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார். நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் சோனை. இவருக்கு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பஸ் நிலையத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பாகங்களை தெருநாய்கள் கடித்து குதறி இருந்தது தெரிய வந்தது.

நோய்வாய் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தவர் மயங்கி விழுந்த நிலையில் தெருநாய்கள் கடித்திருக்க லாம் என்றும், பஸ்க்காக காத்திருந்தபோது தெரு நாய்கள் கடித்திரு க்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.நகரில் தெரு நாய்கள் தொல்லையால் பொது மக்கள் பாதிக்க ப்பட்டு வரும் நிலையில் நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திரு ப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து ள்ளது.

இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com