வருசநாடு அருகே தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது

ரேசன் கடை பகுதியில் தூங்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.தகராறில் தொழிலாளி தலையில் கல்லைபோட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் வருச நாடு அருகே கீழபூசனூத்து கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது72). இவரது மனைவி இறந்து விட்டதால் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.

இரவு நேரத்தில் அப்பகுதி யில் உள்ள ரேசன் கடை வராண்டாவில் தூங்குவார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பவரும் தூங்கினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது குறித்து லட்சுமணன் சதீஷ்குமாரின் பெற்றோரி டம் தெரிவித்தார். அவர்கள் சதீஷ்குமாரை கண்டித்தனர்.

இந்த நிலையில் வெளியூர் சென்ற சதீஷ்குமார் மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது ரேசன் கடையில் தூங்குவதற்காக சென்றார். அங்கு தூங்கிக்கொண்டி ருந்த லட்சுமணனுடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் கல்லை எடுத்து லட்சுமணன் தலையில் போட்டார். இதில் அவர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்து சதீஷ்குமார் தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் லட்சுமணன் இறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் வருசநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அப்பகுதியில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com