என் மலர்tooltip icon

    தேனி

    • மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது.
    • பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் உத்தமபாளையம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது.

    இதில் சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி சேர்மன் என்ஜினியர் முகமது சுல்தான் தலைமையில், தாளாளர் முகமது அபுபக்கர் சித்திக் முன்னிலையில் பள்ளி முதல்வர் முகமது ஷாலி, பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கடைக்கு சென்ற இளம்பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் மகள் பவித்ரா(25). இவருக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், அதனை சரிசெய்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் ஜோதி கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் மாமியாரை மருமகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டி மாணிக்க விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரும் தமிழ்செல்வி என்பவரது மகள் பிரியங்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்துவேறுபாடு ஏற்படவே அவர்கள் பிரிந்து விட்டனர். பிரியங்கா தனது தாயுடன் வசித்து வரும் நிலையில் குடும்பநல நீதிமன்றம் மூலம் தனது கணவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை தேடி வந்தார். அங்கு அவர் இல்லாததால் மாமியார் தமிழ்செல்வியிடம் தகராறு செய்தார். மேலும் அவரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டி தாக்கினார்.

    இதை தடுக்க வந்த முரளி என்பவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை ச்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அழகுராஜா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • பணத்தகராறில் விவசாயியை 2 பேர் கத்தியால் குத்தியதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜீவாநகரை சேர்ந்தவர் நாராயணன் (வயது57). விவசாயி. இவர் பெரியகுளத்தில் உள்ள ராஜபாண்டி என்பவரிடம் வியாபாரம் தொடர்பாக பணம் வாங்கி இருந்தார்.

    இதனை திருப்பிதராததால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மேல்மங்கலம் மேலத்தெருவை சேர்ந்த புல்லட் நாகராஜ் (54) மற்றும் முருகன் ஆகிய 2பேரும் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த தகராறில் நாராயணனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. அணைக்கு 520 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2520 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது. அணைக்கு 100 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி திறக்கப்படுகிறது.

    இருப்பு 1634 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.11அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 78.78 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 37.88 மி.கன அடியாக உள்ள.

    பெரியாறு 7, தேக்கடி 3.2, கூடலூர் 1, சோத்துப்பாறை 1.2, உத்தமபாளையம் 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ப்பட்டது.
    • ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் ஷஜீவனா திருமண ஜோடிகளுக்கு வழங்கினார்.

    தேனி:

    தமிழக அரசு மாநிலம் முழுவதும் பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 கிராம் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்திட உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ப்பட்டது. திருமணத்திற்கு தேவையான 4 கிராம் தாலி ரூ.30,000, மணமகன் ஆடை ரூ.1,000, மணமகள் ஆடை ரூ.2,000, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2,000, மாலை-புஷ்பம் ரூ.1,000, பீரோ ரூ.7,800, கட்டில் ரூ.7,500, மெத்தை ரூ.2,200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1,000, ஒரு மிக்சி ரூ.1,490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3,640 என மொத்தம் ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் ஷஜீவனா திருமண ஜோடிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, துணை தலைவர் சாந்தகு மார், இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் கலைவாணன், கவுமாரி யம்மன்கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, குச்சனூர் கோவில் செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இவரது சகோதரர் உத்தம பாளையத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது பெண்ணிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்ற போது பெண்ணின் வீட்டின்ஹாலில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி வடக்கு ராஜ வீதியை சேர்ந்த மணி மந்திரி மகள் விஜயலெட்சுமி (58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வாழ்ந்து வந்தார். இவரது சகோதரர் உத்தம பாளையத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது விஜயலெட்சுமிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.

    கடந்த 7ஆம் தேதி வீட்டிற்கு வந்த அவர் மீண்டும் 2 நாட்கள் கழித்து அவருக்கு போன் செய்து ள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சகோதரரின் மகன் முத்துக்குமரன் (38) என்பவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். வீடு உட்புறமாக பூட்டி இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது விஜயலெட்சுமி வீட்டின்ஹாலில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து முத்து க்குமரன் போடி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெ க்டர் அசோக் தலைமையி லான் போலீசார் அங்கு வந்து அவரது உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன விஜயலெட்சுமிக்கு அதிகளவு சொத்துகள் இருப்பதால் அதற்காக யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • இதனால் விரக்தியடைந்த அவர் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கினார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியை சேர்ந்த வர் பாலம்மாள் (40). இவர் தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தார். சில வருட ங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பால ம்மாள் பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கினார். இதுகுறித்து உத்தம பாளையம் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனது தம்பிகளுடன் சேர்ந்து முருங்கை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று இவரது தோட்டத்திற்குள் வந்தவர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி தகராறு செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள சென்னம நாயக்க ன்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (55). இவர் தனது தம்பிகளுடன் சேர்ந்து முருங்கை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது தோட்டத்திற்குள் வந்த பெரியசாமி, அவரது மனைவி முருகேஸ்வரி, நல்லமாயன், தங்கப்பாண்டி ஆகியோர் இது தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி தகராறு செய்தனர்.

    மேலும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பராமரிப்பாளர் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது.
    • ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி பிரீத்தா (31). இவர் தற்போது அன்னஞ்சி விலக்கில் குடியிருந்து வருகிறார். வாரம் ஒருமுறை தாமரைக்குளத்தில் உள்ள வீட்டை பார்த்து செல்வார். மேலும் மரியபாக்கியம் என்பவரை பராமரிப்பி ற்காக நியமித்துள்ளார்.

    சம்பவத்தன்று மரிய பாக்கியம் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து பிரீத்தாவுக்கு தகவல் தெரிவித்து, பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகி ன்றனர்.

    • பொதுமக்கள் கோரி க்கையை ஏற்று குமுளியில் பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
    • வணிக வளாக கடைகள், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான அறைகள் மற்றும் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் இந்த பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லை யில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தின் கடைசி எல்லையாக கூடலூர் நக ராட்சி உள்ளது. இப்பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை இல்லாததால் லோயர் கேம்பில் தற்காலிக பணிமனை தொடங்க ப்பட்டது.

    இருந்தபோதும் இங்கு நெடுந்தூரத்தில் இருந்து வரும் வெளியூர் பஸ்கள் மட்டுமே நின்று சென்றது. பெரும்பாலான பஸ்கள் நிற்காததால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    மேலும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. எனவே குமுளியில் நிரந்தர பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கூடலூர் நகர்மன்ற தலைவர் மூலம் எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜனுக்கும் இந்த கோரிக்கை அனுப்ப ப்பட்டது. பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி மூலம் இந்த பரிந்துரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    பொதுமக்கள் கோரி க்கையை ஏற்று குமுளியில் பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகன்துரை, மண்டல இயக்குனர் ஆறுமுகம், பொது மேலா ளர்கள் டேனியல் சால மோன், சமுத்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிக வளாக கடைகள், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான அறைகள் மற்றும் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் இந்த பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக முல்லைப்பெரி யாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
    • கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டுள்ளதால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலைய த்தில் 36 மெகாவாட்டிலிருந்து 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. முதல் போக பாசனத்திற்காக கடந்த ஜூன் 1ந் தேதி 300 கன அடி தண்ணீர் திறக்கப்ப ட்டது. அதன்பின் 21ந் தேதி 336 கன அடியாகவும், 24ந் தேதி 400 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது. ஆகஸ்டு 29ந் தேதி வரை 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் மழை குறைந்ததால் 30 ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்ப ட்டது.

    கடந்த மாதம் 5ந் தேதி முதல் மீண்டும் 400 கன அடியாக அதிகரிக்க ப்பட்டது. குருவனூத்து பாலம் அருகே முல்லை ப்பெரியாற்றின் குறுக்கே மதுரை குடிநீர் திட்ட தடுப்பணை கட்டும் பணிக்காக கடந்த 9ந் தேதி அணையிலிருந்து தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைப்பெரி யாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 500 கனஅடி நீர் திறக்கப்ப்படு கிறது. இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. வரத்து 510 கன அடி. திறப்பு 500 கன அடி. இருப்பு 2520 மி.கன அடி. அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டுள்ளதால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலைய த்தில் 36 மெகாவாட்டிலிருந்து 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது. வரத்து8 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1634 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 79.04 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 12.8, தேக்கடி 2.8, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.6, மஞ்சளாறு 6, சோத்து ப்பாறை 4, பெரியகுளம் 3.6 மி.மீ மழையளவு பதிவானது.

    ×