என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.7 கோடி"
- காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெ க்டர் ஷஜீவனா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- முகாமில் பல்வேறு திட்டங்கள் சார்பில் 1061 பயனாளி களுக்கு ரூ.6.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தேனி:
தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெ க்டர் ஷஜீவனா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது,
பருவகாலங்களில் விவசாயிகள் இடுபொரு ட்கள் பெறுவதற்கு தேவை யான செலவினங்களை மேற்கொள்ள தங்களது வீடுகளில் உள்ள நகைகளை அடகு வைத்து கடனாக பெற்று விவசாயம் செய்து வருவதாக தெரிவித்தார்கள். இதை தவிர்ப்பதற்காக அனைத்து தேசியமயமாக்க ப்பட்ட வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும், விவசாய பணிகளுக்கென விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
விவசாய கடன் அட்டை பெறுவதன் மூலம் ரூ.1.60 லட்சம் வரையில் நில உடைமை அடிப்படையில் பிணையமில்லா கடனாக பெறலாம். மேலும், அசலுடன் வட்டியை குறித்த காலத்தில், சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு, 3 சதவீத வட்டி தொகை, ஊக்கத்தொகையாக விவசாயிகள் வங்கி கண க்கில் வரவு வைக்கப்படும்.
விவசாயிகள் உழவன் செயலி மற்றும் இ-நாம் செயலியை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஆன்லைன் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பெறமுடியும். மேலும், இணையவழி மூலம் விவசாய பொருட்களை விற்பனை செய்வது தொட ர்பான சந்தேகங்க ளுக்கு வேளாண்துறை அதிகாரி களை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். இந்த முகாமில் பல்வேறு திட்டங்கள் சார்பில் 1061 பயனாளி களுக்கு ரூ.6.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இம்முகாமில் தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் கவிதா நந்த கோபால், ஊராட்சிமன்ற தலைவர்ரமேஷ்பாபு, வட்டாட்சியர் சரவணபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.






