என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பதுக்கல்"

    • போடி நகராட்சி பகுதி களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
    • பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ரூ.12,000 வசூல் செய்யபட்டது.

    போடி:

    போடி நகராட்சி பகுதி களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

    அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில் சுகாதார அதிகாரிகள் போடி காமராஜர் பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட நகர்ப்பகுதியில் உள்ள ஓட்டல், வணிக நிறுவன ங்கள், இறைச்சிக் கடை களில் சோதனை நடத்தினர்.

    அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ரூ.12,000 வசூல் செய்யபட்டது.

    மேலும் கடைகளில் இருந்து 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்று தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடை களின் உரிமம் ரத்து செய்ய ப்படுவதுடன் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.

    ×