search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவில் நிபா வைரசால் 2 பேர் பலி : தேனி மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை
    X

    கம்பம் மெட்டு சோதனை சாவடியில் கேரள வாகனங்களை சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் சோதனை செய்த காட்சி.

    கேரளாவில் நிபா வைரசால் 2 பேர் பலி : தேனி மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை

    • தேனி மாவட்ட எல்லைகளான கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் சோதனை நடத்த கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
    • போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து மாவட்ட எல்லையில் வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்கின்றனர்.

    கம்பம்:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் கடந்த 2019, 2021ஆம் ஆண்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மருதோங்கரை, ஆயஞ்சேரி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக புனேவில் உள்ள மத்திய அரசு வைராலஜி இன்ஸ்டியூடிட்ற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 4 பேருக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனாஜார்ஜ் தெரிவித்துள்ளார். இறந்த 2 பேர் மற்றும் குடும்பத்தினர் 2 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் கோழிக்கோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் சென்று வருகின்றனர். எனவே தேனி மாவட்ட எல்லைகளான கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் சோதனை நடத்த கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன் பேரில் கம்பம் மெட்டு அடிவார பகுதியில் டாக்டர் சிராஜீதின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முரளி, தினேஷ் மற்றும் குழுவினர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் மற்றும் போலீசாருடன் இணைந்து வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்கின்றனர்.

    மேலும் கேரளாவில் இருந்து வரும் வாகன ஓட்டிகளின் விபரங்களை சேகரித்து வருகிறனர் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×