என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழலையர் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
கருவேல்நாயக்கன்பட்டி அரசு பள்ளியில் மழலையர் கல்வி வகுப்புகள் தொடக்கம்
- 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மழலையர் கல்வி முறை வகுப்புகள் கருவேல்நாயக்கன்பட்டி சமுதாயக்கூடத்தில் நவீன முறையில் தொடங்கப்பட்டது.
- முன்னதாக பள்ளிக்கு வந்த மழலையர் மாணவ, மாணவிகளுக்கு பேண்டு, மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேனி:
தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியின் சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மழலையர் கல்வி முறை வகுப்புகள் கருவேல்நாயக்கன்பட்டி சமுதாயக்கூடத்தில் நவீன முறையில் தொடங்கப்பட்டது.
இந்த தொடக்க நிகழ்ச்சிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், பள்ளி மேலாண்மை குழு தலைவருமான கடவுள் தலைமை தாங்கி வகுப்பினை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு மழலையர் அமரும் நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள், இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டிலட்சுமி, ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, சரண்யா, அஜீத்தா மற்றும் பொது பள்ளி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கு வந்த மழலையர் மாணவ, மாணவிகளுக்கு பேண்டு, மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.