என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    கும்பகோணம்:

    கும்போணத்தில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை 9-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கும்பகோணம் செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கும்பகோணம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இக் கூட்டத்தை மேற்பார்வை பொறியாளர் நளினி நாளை வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடத்தவுள்ளார்.

    இதில் கும்பகோணம் நகரம், கும்கோணம் புறநகர், பாபநாசம் நகரம், பாபநாசம் புறநகர், கபில்தலம், அய்யம்பேட்டை நகரம், அய்யம்பேட்டை புறநகர், திருக்கருகாவூர் கணபதிஅக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலக பகுதியைச் சார்ந்த மின் நுகர்வோர் தங்களுக்கு எதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
    • பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொ ண்டாடுவது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை விளார் சாலை பர்மா காலனி தில்லை நகரில் உள்ள தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதற்கு டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஆரோன்ராஜ், பள்ளித்தாளாளர் லாரன்ஸ், நிர்வாக அலுவலர் டோனி சுகந்த், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் (போக்குவரத்து) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாணவி ஷோபிகா வரவேற்று பேசினார்.

    இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-

    அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகள் கண்டிப்பாக பெரியோர்கள் முன்னிலையில் தான் பட்டாசுகளை படிக்க வேண்டும்.

    பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    செருப்பு அணிந்து கொண்டு வெடி வெடிக்க வேண்டும். முக்கியமாக வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

    பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவியாக தீப்புண் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

    பின்னர் உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    எந்த காரணம் கொண்டும் தீக்காயம் ஏற்பட்டால் பேனா மை, வாழைச்சாறு, பேஸ்ட் போன்றவற்றை தடவக்கூடாது.

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 200 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

    இவற்றில் 190 தீ விபத்துக்கள் அலட்சியம், கவனக் குறைவால் ஏற்பட்டது.

    எனவே அலட்சியம், கவனக்குறைவு இல்லாமல் விபத்தில்லா தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோதி ,சக்தி, ஆசிரியை காயத்ரி மற்றும் மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார். முன்னதாக பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் எனவும், எப்படி வெடிக்க கூடாது எனவும் மாணவ- மாணவிகள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • முதல் நாளான இன்று உயரம், எடை சரி பார்க்கப்பட்டது.
    • 2-ம் நாளான நாளை உடல் திறன் சோதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரி யத்தின் மூலம் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பணியி டங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று உடல் தகுதி தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது.

    இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை மாவட்டங்களில் இருந்து 417 பேர் கலந்து கொண்டனர். இதில் 80 பேர் ஏற்கனவே பணியில் உள்ள போலீசார் ஆவர். அனைவரும் சான்றிதழ் சரி பார்ப்புக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த உடல் தகுதி தேர்வை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் பார்வையிட்டனர். முதல் நாளான இன்று உயரம், எடை சரி பார்க்கப்பட்டது. பின்னர் 1500 மீ ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை வரை உடல் தகுதி தேர்வு நடந்தது.

    2-ம் நாளான நாளை உடல் திறன் சோதனை நடைபெறுகிறது. இதில் நீளம், உயரம் தாண்டுதல் , கயிறு ஏறுதல் நடைபெற உள்ளது. இந்த 2 நாள் சோதனையில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முக தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் வழங்கப்படும்.

    • கார்த்திகை நட்சத்திரம் அன்றும் வளர்பிறை சஷ்டி அன்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
    • வருகிற 18-ந்தேதி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூர் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.

    இத்தலத்தில் பக்தர்கள் திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய, முகூர்த்த ஓலை எழுத, திருமணம் செய்ய பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    இங்கு பிரதி கார்த்திகை நட்சத்திரம் அன்றும் வளர்பிறை சஷ்டி அன்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனையும் நடக்கிறது.

    இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டிப் பெருவிழா பத்து நாட்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலைப் போலவே இங்கும் நடைபெறுகிறது. அதன்படி வருகின்ற 12- ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 23-ம்தேதி வரை கந்தர் சஷ்டி பெருவிழா நடைபெறுகிறது . 12-ம்தேதி பூர்வாங்கம், 13-ம்தேதி துவஜாரோகணம் (கொடியேற்றம்) அன்ன வாகனம் , 14-ம்தேதி மான் வாகனம், 15-ம்தேதி பூத வாகனம்,16-ம்தேதி யானை வாகனம்,17-ம்தேதி ரிஷப வாகனம் (பஞ்சமூர்த்திகள் எழுந்தருளள்), 18-ம்தேதி வெகுவிமரிசையாக சூரசம்ஹாரம், ஆடு ,மயில் வாகனம்,19-ம்தேதி திருக்கல்யாணம் மற்றும் முத்துப்பல்லக்கு, 20-ம்தேதி குதிரை வாகனம், 21-ம்தேதி திருத்தேர், 22-ம்தேதி தீர்த்தம் கொடுத்தல் மயில் வாகனம் துவஜாஅவஅராகணம் (கொடி இறங்குதல்), 23-ம்தேதி சிறப்பு அபிஷேகம் ஊஞ்சல் ஏகாந்த சேவை நடக்கிறது.

    திருச்செந்தூர் சென்று கந்தசஷ்டி விரதம் இருக்க இயலாதவர்கள் இத்தலத்தில் கந்த சஷ்டி விரதம் இருந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஏழை, எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும்.
    • இளைஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்கள், சமையல் கலைஞர்களுக்கு இன்று பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இனிப்புகள், ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறும் போது:

    இரவு பகல் பாராமல் உழைக்கும் ஆட்டோ டிரைவர்கள், மக்களின் பசியை போக்கி தரமான உணவை தயார் செய்யும் சமையல் கலைஞர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

    ஏழை எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும்.

    குறிப்பாக இளை ஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.

    இதன் பலன் அனைவருக்கும் கிடைக்கும் என்றார்.

    • காயமடைந்த மற்றொரு நபரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்.
    • நேரில் சென்று நலம் விசாரித்த துணை மேயர் அஞ்சுகம்பூபதி செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் இரண்டு பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தனர்.

    அப்போது அந்த வழியாக மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நான்கு பேர் காயமடைந்து கிடப்பதை பார்த்து உடனடியாக காரை நிறுத்துமாறு கூறினார்.

    பின்னர் பள்ளி குழந்தைகள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு தனது காரில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். காயமடைந்த மற்றொரு நபரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்.

    இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததோடு நேரில் சென்று நலம் விசாரித்த துணை மேயர் அஞ்சுகம்பூபதி செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 59).

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    தஞ்சை மூலிகைப் பண்ணை ரோட்டில் வந்த போது சாலை யில் மாடு ஒன்று குறுக்கே புகுந்தது.

    மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

    இதில் கட்டு ப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 100 நாள் வேலைத்திட்ட பணியில் ஈடுபடும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மூன்று மாத காலமாக நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செல்வம் மற்றும் நீலமேகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களை எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    • மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும்.

    சுவாமிமலை:

    தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் கார்த்தி வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடந்தது.

    இதில் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பருத்தி ஆடைகள் அணிந்து கொண்டு மாணவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

    மேலும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பின்னர், மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்காக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பள்ளி தலைவர் கார்த்திகேயனை, மாணவர்களின் பெற்றோ ர்கள் பாராட்டினர்.இதில் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கலந்துகொண்டு மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் வைத்துக்கொள்ள கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் பேசினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அம்பிகாபதி செய்திருந்தார்.

    இதில் தீயணைப்பு துறை பணியாளர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மின் இணைப்பு சர்வீஸ் வயர்களை இன்சுலேட்டர் உருளை கொண்டு இழுத்து கட்ட வேண்டும்.
    • கரன்ட் டிவைஸ் பொருத்துவதன் மூலம் மின் விபத்துக்களை தவிர்க்கலாம்.

    தஞ்சாவூர்:

    மழை காலங்களில் பொது மக்கள் மின் விபத்தினை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    பழுதடைந்த மின் இணை ப்பு சர்வீஸ் வயர்களை அருகில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் தெரி வித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது சர்வீஸ் வயரில் ஜாயிண்ட் மற்றும் சர்வீஸ் பைப் வாய்பகுதியில் ஜாயிண்ட் போடுவதை தவிர்க்க வேண்டும்.

    மின் இணைப்பு சர்வீஸ் வயர்களை இன்சுலேட்டர் உருளை கொண்டு இழுத்து கட்ட வேண்டும்.

    வீட்டு மின் இணைப்பில் உள்ள நில இணைப்பு பைப் மற்றும் வயர் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நில இணைப்புக்கு செல்லும் கம்பிகளை தொடக்கூடாது. சர்வீஸ் மின் பைப்பில் கொடிகளை கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

    மின் இணைப்பில் ஈஎல்சிபி எனப்படும் எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் அல்லது ஆர்சிடி'என அழை க்கப்படும் 'ரெசிடுயல் கரன்ட் டிவைஸ் பொருத்துவதன் மூலம் மின் விபத்துக்களை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
    • தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 65) இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.

    ஏகாம்பரம் சுமை தூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது கூரை வீட்டில் திடீரென தீ பிடித்தது எரிய தொடங்கியது. பின்னர் வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் வீடு முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முடியவில்லை.

    அதற்குள் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த தளவாட சாமான்கள், மின் சாதனங்கள், கட்டில் பீரோ, புடவை என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    சம்பா சாகுபடிக்கான தண்ணீர் உடனடியாக பெற்று தர வேண்டும்.

    2022- 23 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டை மறு ஆய்வு செய்து உரிய இன்சூரன்ஸ் நிதி வழங்க வேண்டும்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் (சி.பி.ஐ சார்பு) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

    விவசாய சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் முடித்து வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர்கள் துரை.மதிவாணன், முத்துக்குமரன், அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு, காவிரி தாய் இயற்கை வழி வேளாண் நடுவம் சீர்.தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    ×