முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய எம்.எல்.ஏ.

ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தீபாவளி கொண்டாடினார்.அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.
ஆதரவற்றோர் இல்ல முதியோர்களுக்கு டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. புத்தாடை வழங்கினார்.
ஆதரவற்றோர் இல்ல முதியோர்களுக்கு டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. புத்தாடை வழங்கினார்.
Published on

தஞ்சாவூர்:

தீபாவளி திருநாளில் ஆதரவற்றோர், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை மங்களபுரத்தில் உள்ள அதுல்லாம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., அங்குள்ள அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.

முதியவர்கள், சிறுவர்களைப் போல் மத்தாப்புகளை கொளுத்தி உற்சாகமடைந்தனர்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு , எம்.எல்.ஏ.வுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க பகுதி செயலாளர்கள் நீலகண்டன் (கீழவாசல்), சதாசிவம் (மருத்துவ கல்லூரி), மண்டல குழு தலைவர் கலையரசன், கவுன்சிலர்கள் ஆனந்த், அண்ணா.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com