என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(வயது17) என்பவர் கடந்த 26-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 6 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய கீழவாணியங்குடியைச் சேர்ந்த சேகர்(54) மற்றும் மானாமதுரையை சேர்ந்த தமிழரசன்(19), தினேஷ்குமார் என்ற அசோக்குமார்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சென்னையில் இருந்து காளையார்கோவில் வந்த தீயணைப்பு படை வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் தீயணைப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் வருவதற்கு முன்பாக சென்னையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவு வருவதற்குள் காளையார்கோவில் வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து சென்னை சுகாதாரத்துறையினர் அந்த தீயணைப்பு படை வீரருக்கு இந்த தகவலை தெரிவித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த தீயணைப்பு படை வீரர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் தற்போது 6 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சிவகங்கை அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 16). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய ராஜேஷ் நேற்று மாலை வீட்டின் அருகே நண்பர்கள் சுதந்திரராஜன், அர்ச்சுணன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 7 பேர் கும்பல் வந்தது. அந்த கும்பல் ராஜேசை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர்கள் சுதந்திர ராஜன், அர்ச்சுணன் ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    கொலை குறித்த தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை சூப்பிரண்டு அப்துல்கபூர், இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் இடம் தொடர்பான முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. ராஜேஷ் குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த குதாம் சேகர் குடும்பத்திற்கும் இடப் பிரச்சினை இருந்துள்ளது.

    இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குதாம் சேகரை ராஜேஷ் தரப்பினர் வெட்டினர். இந்த முன் விரோதத்தில் ராஜேசை, சேகரின் மகன்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது தெரிய வந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குதாம் சேகரின் மகன்கள் தயாநிதி (25) பாண்டித்துரை (19) தம்பிதுரை (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக தயாநிதியின் நண்பர்கள் வெற்றிவேல், மருது பாண்டி, தினேஷ் குமார் ஆகியோரை நேற்று இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    பட்டப்பகலில் நடுரோட்டில் 17 வயது வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்ற குட்டை சங்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவருக்கும் ஏற்கனவே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சங்கரின் உறவினரான ராஜேசும் (வயது 17), அவருடைய நண்பர் சுதந்திரராஜனும் (17) கீழவாணியங்குடி சாலை பகுதியில் நின்றிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை விரட்டினர்.

    இதைக்கண்டதும் ராஜேஷ் மற்றும் சுதந்திரராஜன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடினர். அவர்களை அந்த கும்பல் விடாமல் துரத்தியது.

    பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ராஜேஷ் உள்பட 2 பேரையும் சுற்றி வளைத்து, சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுதந்திரராஜன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

    நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி நடந்த இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த சுதந்திரராஜன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை சூப்பிரண்டு அப்துல்கபூர், சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராஜேஷ் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருதரப்பினர் வீடும் அருகருகே இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இந்த கொலை குறித்து சேகரின் மகன்களான தயாநிதி (வயது25), தம்பித்துரை (20), பாண்டித்துரை (19) மற்றும் வெற்றிவேல், மருதுபாண்டி, சரவணன், தினேஷ்குமார் உள்ளிட்டவர்கள் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக கூடுதல் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் கூறுகையில், “இந்த சம்பவத்தில் தொடர்புடைய அண்ணன்-தம்பிகளான தயாநிதி, தம்பித்துரை, பாண்டித்துரை ஆகிய 3 பேரை சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை தேடி வருகிறோம்” என்றார்.
    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் இணையதள வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் ஏதும் நடத்தப்படவில்லை. மேலும் தேர்வர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதள வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுஉள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுஉள்ளது. தற்போது பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்தே போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கு இப்பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் 9943438222, 8778970857, 04575-240435 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின் புத்தகங்கள், மாதிரி தேர்வு வினாத்தாள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. தேர்வர்கள் தங்களது பெயர், பாலினம், முகவரி மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்த பின் பயனீட்டாளர், பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். இந்த இணையதளத்தில் வரும் பாடக் குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 
    பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரத்திற்குபின் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என தி.மு.க. இளைஞரணி தெரிவித்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துஷாந்த் பிரதீப்குமார், ரவி, சேதுபதிராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

    கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவதற்கு முன்பு தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகளை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முகாம்களாக பள்ளிகள் செயல்பட்டு வருவதால் அவற்றை பயன்படுத்தும் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரத்திற்குபின் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 
    தேவகோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை பழைய சருகணி சாலை பகுதியில் வசித்து வந்தவர் தச்சுத் தொழிலாளி கணேசன்(வயது28). தற்போது ஊரடங்கு காரணமாக எவ்வித வேலையும் இல்லாத நிலையில் வறுமையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உள்பட 12 பேர் நேற்று வீடு திரும்பினர்.
    சிவகங்கை:

    கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர் திரும்பினர்.

    அவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஏற்கனவே ஒரு சிறுமி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று 9 வயது சிறுவன் உள்பட 12 பேர் பூரண குணமடைந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்களை கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேலு, மருத்துவ அலுவலர் மீனா மற்றும் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இன்னும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அந்த மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
    இணையதளம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் செயல் படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    தற்போது நடைமுறையில் உள்ள கொரானா-19 ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் நடத்த இயலவில்லை. எனவே மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே போட்டித் தேர்வுக்களுக்கு தயாராகும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இணையதள வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் ஆலோசனையின் படி, சிவகங்கை மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

    தற்போது பேருந்து போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கு இப்பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் 9943438222, 8778970857, 04575 - 240435 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை அருகே இளையான்குடி புதூர் பகுதியில் ரேஷன் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில், ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியபோது அங்கு 4¾ டன் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அங்குள்ள வாணிப கழக கிட்டங்கியில் லோடுமேனாக பணியாற்றி வரும் பாண்டி என்பவர் அங்கு பதுக்கி வைத்திருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

    நிவாரணமாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட அரிசியை பதுக்கியது தொடர்பாக வினியோக அதிகாரி முபாரக் உசேன் கொடுத்த புகாரின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கின.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இந்த 5 கட்ட அகழாய்வின் போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டன.

    இதையடுத்து தொடர்ந்து 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கீழடியிலும், அதன் பின்னர் கொந்தகை, அகரம் பகுதியிலும் அகழாய்வு நடைபெற்று வந்தது. இதில் கீழடியில் பெரிய, சிறிய பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொந்தகையில் நடைபெற்ற பணியின் போது முதுமக்கள் தாழி, பானைகள், மனித எலும்புகள் ஆகியவையும், அகரம் பகுதியில் பானை ஓடுகளும் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டன. இந்த 6-வது கட்ட அகழாய்வு பணி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அகழ்வாராய்ச்சி முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகள் தார்ப்பாய்களால் மூடப்பட்டன. மேலும் அங்கு பார்வையாளர்கள் வராமல் தடுக்கும் வகையில் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன.

    கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டு இருந்த அகழாய்வு பணிகள் நேற்று முதல் தொடங்கின. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த பணியில் தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து ஈடுபட்டனர்.

    கீழடி மற்றும் அகரம் பகுதியில் மட்டும் நேற்று பணிகள் நடைபெற்றன. கொந்தகை பகுதியில் பணி இன்னும் தொடங்கவில்லை. 6-வது கட்ட அகழாய்வு நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கியதை அறிந்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான அகழாய்வு காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த கலெக்டர் காலில் விழுந்து வெளிமாநில தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
    சிவகங்கை:

    கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நூற்பு ஆலைகள், ஓட்டல்கள் மற்றும் கட்டிட தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதால் தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர். இதையடுத்து சிவகங்கையை அடுத்த அரசனூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 70 தொழிலாளர்களை 2 பஸ்களில் ஏற்றி அனுப்ப மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அவர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு பஸ்களில் புறப்பட்டனர். அவர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பொன்னாடை அணிவித்து அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து அந்த தொழிலாளர்கள் கலெக்டரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:- ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் வேலை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 22 பேர், பீகார் மாநிலத்தை சேர்ந்த 185 பேர், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், மணிப்பூரை சேர்ந்த ஒருவரும், ஒடிசாவை சேர்ந்த 60 பேர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 460 பேரை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி உடனிருந்தார்.
    ×