search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இணையதளம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
    X
    இணையதளம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

    இணையதளம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு- சிவகங்கை கலெக்டர் தகவல்

    இணையதளம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் செயல் படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    தற்போது நடைமுறையில் உள்ள கொரானா-19 ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் நடத்த இயலவில்லை. எனவே மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே போட்டித் தேர்வுக்களுக்கு தயாராகும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இணையதள வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் ஆலோசனையின் படி, சிவகங்கை மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

    தற்போது பேருந்து போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கு இப்பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் 9943438222, 8778970857, 04575 - 240435 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×