என் மலர்
சிவகங்கை
100 நாள் வேலைதிட்டத்தில் 400 கோடி ரூபாய் அளவிற்கு மெகா ஊழல் அரங்கேறி உள்ளது என தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
நெற்குப்பை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
அவர் திருப்பத்தூரில் உள்ள காந்தி சிலை மற்றும் மருது பாண்டியர்களின் நினைவுத்தூணுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் சுயநிதி குழுக்கள் சந்திப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்குதல், விவசாயிகள் சந்திப்பு, பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மத்தியில் ஆளும் பா. ஜனதா அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு பெண்களை பாதுகாக்க தவறி விட்டது. இளைஞர்களின் மத்தியில் வேலைவாய்ப்பு வெறும் கனவாகவே இருந்து வருகிறது.
100 நாள் வேலைதிட்டத்தில் 400 கோடி ரூபாய் அளவிற்கு மெகா ஊழல் அரங்கேறி உள்ளது. தி.மு.க. கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி, அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இன்றளவும் எடுக்கவில்லை. இன்னும் 3 மாதம் தான். மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் நலன் பேணுதல், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், நீட் தேர்வு இன்றி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்குதல், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் ஆக மாற்றுதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்தல், என மக்களின் அனைத்து தேவைகளையும் உடனடியாக நிறை வேற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மானாமதுரை:
இந்தியா முழுவதும் நாளை(செவ்வாய்க்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மானாமதுரை வைகை ஆற்று ரெயில்வே பாலத்தில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் துரை, எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர். தண்டவாளங்களில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது.

காரைக்குடி அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி பாரதி நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிவேதா (வயது 21). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.சம்பவத்தன்று நிவேதாவின் தாயார் உறவினர் ஒருவரின் இல்ல சுப நிகழ்விற்காக வெளியே சென்று விட்டார். அவரது தம்பி வேலைக்கு சென்று விட்டார்., வீட்டில் தனியாக இருந்த நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை அருகே மழையால் பாதித்த பயிருக்கு நிவாரணம் வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தேவகோட்டை:
சமீபத்தில் பெய்த கடும் மழையால் தேவகோட்டை ஒன்றியம் மற்றும் கண்ணங்குடி ஒன்றியம் அதிகம் பாதிப்பு அடைந்து உள்ளது. 357 கிராமங்களில் அறுவடை தயாராக இருந்த நெற்பயிர் மழையால் சேதம் அடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய பேரிடர் நிதியின் கீழ் 100 சதவீத இழப்பீடு நிவாரணம் வழங்க கோரி நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேவகோட்டை தாசில்தார் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
அதன் பிறகு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதற்கு அதன் தாலுகா செயலாளர் செல்வம் என்ற சுந்தரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், தாலுகா செயலாளர் பொன்னுச்சாமி, செந்தமிழ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் குழந்தைகள் வளர்ச்சி தி்ட்ட அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சரோஜா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் லெட்சுமி, மாவட்ட இணைச்செயலாளர் ஜஸ்டின்பிரேமா, ஒன்றியச் செயலாளர் பொன்மலர் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
அங்கன்வாடி பணியாளர் உண்ணாமலை கருத்துரை வழங்கினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் பெரியசாமி சிறப்புரையாற்றினார்.
திருப்புவனம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,
திருப்புவனம்:
திருப்புவனம் பகுதிக்குள் பல்வேறு இடங்களில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் செல்லப்பாண்டி(வயது 24), கொம்பையா(18), பன்னீர்செல்வம்(19) உள்பட 6 பேரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்கள், ரூ.5406-ஐ கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி:
காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச்செயலாளர்கள் இளைய கவுதமன், பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழேந்தி, நகர செயலாளர் ரமேஷ் ராஜா, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் பெரியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கதவை உடைத்து வீடு புகுந்து 80 பவுன் நகை, 6½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, வீடு முழுக்க மல்லிப்பொடியை தூவி கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர், கார்மேகம். இவருடைய மனைவி ராஜாமணி (வயது 60). இவர்களது மூத்த மகன் ரமேஷ் திருச்சியிலும், இளைய மகன் சுரேஷ் சிங்கப்பூரிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக 2 மகன்களும் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, பின்னர் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். மூத்த மருமகள் ராதிகா மட்டும் ராஜாமணியுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் ராஜாமணியும், ராதிகாவும், துக்க நிகழ்ச்சிக்காக மற்றொரு ஊருக்கு சென்றிருந்த நிலையில், அவர்களது வீடு பூட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று அவர்கள் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 80 பவுன் நகை, வீட்டில் இருந்த 6½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இந்த துணிகர கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. மோப்பநாய் மூலம் தங்களை பிடித்து விடாமல் இருக்கவும், தடயத்தை அழிக்கவும் வீட்டில் சமையல் அறையில் இருந்த மல்லிப்பொடியை எடுத்து வீடு முழுவதும் தூவிவிட்டு கொள்ளையர்கள் தப்பியதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். ஆனால், அங்கு எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் என தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன், எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(25-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் கலந்துகொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். நாளை காலை 8.30 மணிக்கு காரைக்குடியில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தல், கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சங்கராபுரம், சிறுவாச்சியில் கிராம சபை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்று பேசுகிறார்.
பின்னர் தேவகோட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திடக்கோட்டை கிராமத்தில் வணிகர்கள், விவசாயிகள் ஆகியோருடன் சந்திக்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு தேவகோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் தி.மு.க. மாவட்ட முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ரூசோ சிலைக்கு மாலை அணிவித்தல், குன்றக்குடியில் பொதுமக்கள் சந்திப்பு, திருப்பத்தூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் வியாபாரிகளுடன் சந்திப்பு நடைபெறுகிறது.
மாலை 3 மணிக்கு மகளிர் குழுவினரை சந்தித்து குறைகள் கேட்கிறார். பின்னர் மகிபாலன்பட்டி கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டம் உலகம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து குறைகளை கேட்டல், எஸ்.புதூர் ஒன்றியத்தில் விவசாயிகள் சந்திப்பு மற்றும் இரவு சிங்கம்புணரியில் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 25-ந்தேதி காலை 8.30 மணிக்கு கல்லலில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டல், காளையார்கோவில் ஒன்றியம் ஆலவிளாம்பட்டியில் சமுதாய கூடம் திறப்பு, சிவகங்கை ஒன்றியம் அலவாக்கோட்டையில் இயற்கை விவசாயிகளுடன் சந்திப்பு, காளையார்கோவிலில் கிராம சபை கூட்டம், இண்டன்குளத்தில் மின்சாரம் தாக்கி இறந்த தி.மு.க. தொண்டர் லூர்துசாமி வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தல், இளையான்குடி நகரில் பொதுக்கூட்டம், சாலைகிராமத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு, கீழநெட்டூர் கிராமத்தில் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மாலை 5.30 மணிக்கு மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்களுடன் சந்திப்பு, ராஜகம்பீரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் சந்திப்பு, கொம்புகாரனேந்தல் கிராமத்தில் தா.கிருட்டிணன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு இரவு 7.15 மணிக்கு திருப்புவனத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெல்மணிகளை அறுவடை செய்து அதை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த பருவமழையை நம்பி விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் நெல் பயிரிட்டனர். இந்நிலையில் நெற்பயிர் அறுவடைக்கு தயாரான காலகட்டத்தில் புெரவி மற்றும் நிவர் புயல் காரணமாக 10நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்தது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமானது.
சில இடங்களில் நெற்பயிர் தரையில் சாய்ந்தும் போனது. இதையடுத்து விவசாயிகள் இந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக டீசல் மோட்டார் மூலமும், கை இறவை கொண்டும் தண்ணீரை வெளியேற்றினர்.
அதிலும் குறிப்பாக இளையான்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு பயிரிடப்பட்டிருந்த மிளகாய் மற்றும் நெல் பயிர்கள் முற்றிலும் சேதமானது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழையில்லாமல் வெயில் அடித்ததால் விவசாயிகள் எஞ்சியுள்ள நெல் பயிரை அறுவடை செய்தனர். அதை களத்து மேட்டில் பிரித்தெடுத்து ஈரமான நெல்மணிகளை வெயிலில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி பகுதியில் நெல்மணிகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-
பருவ மழையை நம்பி விவசாய நிலத்தில் குறுகிய கால பயிர்களை பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் தொடர்ந்து பெய்த புயல் மழை காரணமாக பெரும்பாலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. ஒரு சில பயிர் மறுபடியும் முளைக்க தொடங்கின. மீதமுள்ள பயிரை காப்பாற்றுவதற்காக மணிக்கு ரூ.500 வரை செலவு செய்து டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். இந்த வகையில் ரூ.3ஆயிரம் வரை செலவு ஆனது.
மேலும் வயலில் தேங்கிய நீரை முற்றிலும் அப்புறப்படுத்திய பின்னர் ஆட்கள் மூலம் அறுவடை செய்து களத்து மேட்டில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எனினும் நெல் பயிர் நடவு, களை எடுத்தல் உள்ளிட்ட பணிக்காக ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தற்போது அறுவடை செய்துள்ள இந்த நெல்மணிகளை செலவு செய்த தொகைக்கு கூட வரவில்லை. ஏற்கனவே பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு நிவாரண உதவி கோரி இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இளையான்குடி:
இளையான்குடி வட்டாரத்தில் தொடர் மழையால் அனைத்து விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் அரசு நிவாரண உதவி கோரி இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அந்த மனுவில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் குறையாமல் நிவாரணம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ராஜு, ஜெயந்தி, சந்தியாகு, விவசாய சங்க தென் கடுக்கை கிராமத்தின் கிளை தலைவர் செல்லமுத்து சேதுபதி ஆகியோருடன் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிவாரண உதவி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம். பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-
வேளாண் சட்டத்தில் பா.ஜ.க அரசு வறட்டு பிடிவாதம் பிடித்து வருகிறது.
தமிழகத்தில் முதல்வர், துணை, முதல்வருக்குள் இருந்து வரும் கருத்து வேறுபாட்டை மறைக்கவே, புதிய திட்டங்கள் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படுகிறது.
தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம். இதில் பா.ஜ.க. என்ற நச்சு செடி வளராது மலராது. பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும். காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டது கிடையாது, சமரசத்திற்கு இடமும் இல்லை.
மகளிர் குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடனில், ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.