என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு நிவாரண உதவி கோரி இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
  இளையான்குடி:

  இளையான்குடி வட்டாரத்தில் தொடர் மழையால் அனைத்து விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் அரசு நிவாரண உதவி கோரி இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அந்த மனுவில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் குறையாமல் நிவாரணம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

  போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ராஜு, ஜெயந்தி, சந்தியாகு, விவசாய சங்க தென் கடுக்கை கிராமத்தின் கிளை தலைவர் செல்லமுத்து சேதுபதி ஆகியோருடன் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிவாரண உதவி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

  Next Story
  ×