என் மலர்

  செய்திகள்

  போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காட்சி
  X
  போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காட்சி

  குடியரசு தின விழா : மானாமதுரை ரெயில்வே பாலத்தில் போலீசார் சோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடியரசு தின விழாவை முன்னிட்டு மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
  மானாமதுரை:

  இந்தியா முழுவதும் நாளை(செவ்வாய்க்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

  பின்னர் மானாமதுரை வைகை ஆற்று ரெயில்வே பாலத்தில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் துரை, எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர். தண்டவாளங்களில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது.
  Next Story
  ×