என் மலர்
சிவகங்கை
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் 100நாள் வேலை திட்டத்தின் மூலம் விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், ஆவரங்காடு விவசாயிகளும் 100 வேலை திட்டத்துக்கு சென்று வருகின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வீரபாண்டி, மாவட்ட தலைவர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆண்டி, ஆவரங்காடு தி.மு.க. கிளை செயலாளர் தவமணி ஆகியோர் தலைமையில் இப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், தற்போது 100நாள் வேலை திட்டத்துக்கு காலை 6 மணிக்கு வரச்சொல்கிறார்கள். மேலும் ஊதியத்தை குறைத்து வழங்குகிறார்கள். இதனால் 100 நாள் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகிறார்கள். காலை 8 மணிக்கு வேலைக்கு வரவேண்டும் என்பதனையும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி, மானாமதுரை நகராட்சி ஆகிய அலுவலகங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, வாக்குப்பதிவு மையங்களுக்கு பயன்படுத்த உள்ள எழுதுபொருட்கள் மற்றும் படிவங்கள் இவற்றுடன் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலு வலகத்தில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி நடந்தது.
இதை மாவட்ட தேர்தல் அலுவலர்-கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
மாநில தேர்தல் ஆணைய அறி வுரைப்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை(19ந்தேதி) நடைபெறுகிறது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. அவற்றுடன் படிவங்கள், எழுதுபொருட்கள், மை மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் என 80 வகைப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதற்கான பணிகள் இன்று அனைத்து தேர்தல் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கும், 11 பேரூராட்சிகளுக்கும் என 15 இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 285 இடங்களில் 9 இடங்களுக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப் பட்டதால், 1 இடத்தில் வேட்புமனு வரவில்லை. 275 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றன. இவற்றிற்கு 45 மண்டலமாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள் நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்துப்பணிகளும் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலர் என்ற முறையில் நானும், மாவட்ட தேர்தல் பார்வையாளர் தங்கவேலு ஆய்வுப்பணி மேற்கொண்டு, தற்பொழுது அனைத்துப் பணிகளும் முடிவுற்று தயார் நிலையில் உள்ளது.
அதேபோல் வாக்குப் பதிவு மையத்தில் பணி யாற்ற உள்ள தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 3&ம்கட்ட தேர்தல் பணிக் கான பயிற்சி வழங்கப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்கிறார்கள்.
தேர்தல் பணியை பொறுத்த வரை முழுமையாக முடிக்கப்பட்டு, அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சி.சி.டி.வி. காமிரா மூலம் பதிவு செய்வதுடன், பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, திருப்புவனம் பேரூராட்சி தேர்தலுக்கான வட்டார அலுவலர் ஜீனு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, மானாமதுரை நக ராட்சி ஆணையாளர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கீழடியில் தற்போது நடந்த அகழாய்வு பணியில் முதன்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்தாலான பகடைக்காய் கிடைத்துள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த 11-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நேற்று கீழடியில் பணிகள் நடைபெற்றபோது, 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 2 பச்சை நிறமும், 2 ஊதா நிறத்திலும் உள்ளன.
தொடர்ந்து குழி தோண்டியபோது நேற்று மாலையில் செவ்வக வடிவில் ஒரு பொருள் கிடைத்தது. அதனை ஆய்வு செய்தபோது, அது யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் என தெரிய வந்துள்ளது. இதுவரை தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கன சதுர வடிவத்தில்தான் பகடைக்காய் கிடைத்து வந்தன. தற்போது நடந்த அகழாய்வு பணியில் கீழடியில், முதன்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்தாலான பகடைக்காய் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
சிவகங்கை
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டுசெல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
அதன்படி நாளை(18ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் வெள்ளிபட்டி கிராமத்திலும், தேவ கோட்டை வட்டத்தில் திருப்பாக்கோட்டை கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் மாதவராயன் பட்டி கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் வடவன்பட்டி கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் வேம்பத்தூர் கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் மிளகனூர் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் கொத்தங்குளம் குரூப், வு.ஆலங்குளம் கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில்¢ பெரும்பச்சேரி கிராமத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் கால்குளம் கிராமத்திலும், நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருச்சி-காரைக்குடி மின் ரெயில்பாதையில் அதிகாரி ஆய்வு செய்தார்.
காரைக்குடி
திருச்சி-காரைக்குடி புதிய மின் மயமாக்கப்பட்ட ரெயில் பாதையை தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் இன்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஆணையரது ஆய்வு ரெயில் திருச்சியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டது.
அப்போது திருச்சி, குமாரமங்கலம், புதூர், அய்யம்பட்டி ரெயில்வே கேட் மற்றும் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு ஆணையருடன் முதன்மை மின்சார பொறியாளர் ராஜமுருகன், மின்மயமாக்கல் திட்ட இயக்குனர் சமீர் டிஹே, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
நெற்குப்பை பொதுபிச்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மேலநெற்குப்பை தேவர்நகர் பகுதியில் பொதுபிச்சி அம்மன் கிழவன்-கிழவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் “ராவாத்தா” என்னும் மாசி மாத திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்குள்ள செட்டி ஊரணி குளத்தில் மண் எடுத்து கிழவன்&கிழவி சிலைகள் செய்து காப்பு கட்டி, அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் பெண்கள் கும்மியடித்து வழிபடுவார்கள்.
விழாவின் 10ம் நாளன்று இப்பகுதியில் பிறந்த பெண்கள் திருமணம் முடித்து எந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும் விழாவிற்கு வந்து கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
விழாவின் 10ம் நாளான நேற்று அனைவரும் கூடி கும்மியடித்து கிழவன்& கிழவி கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பொங்கலை சுவாமிக்கு படையலிட்டு விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
இந்த விழாவை தொடர்ந்து தொட்டி சேலை கட்டி கோவிலை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இறுதியாக இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு பரிசு பொருட்களை ஏலம்விட்டு அதனால் ஈட்டப்படும் லாபத்தை கோவில் நிர்வாக பணிக்கு கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கலெக்டர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தங்கவேல், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசிய தாவது:&
மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. அதனையொட்டி வட்டார தேர்தல் அலுவலர்கள் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான உபகரணங்களை நாளை (18ந்தேதி) செல்லும் வகையில் திட்டமிடுதல் வேண்டும்.
இவ்வாறு செல்லும் பொருட்கள் சரியாக உள்ளதா என பார்வையிட்டு ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் அனுப்பவேண்டும். மேலும் வாக்குப்பதிவு நாளன்று மாற் றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்ல ஏதுவாக, சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவதையும் அனைத்து மையங்களுக்கும் சக்கர நாற்காலிகள் அனுப்பி வைத்திட வேண்டும்.
அதேபோல் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் போதிய அளவு மின்சார வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதுடன் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் கட்டாயம் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணித்திட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் வெப் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும். எனவே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்தையும் ஆய்வு செய்து சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திடவேண்டும்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் தலைமை அலுவலர் உரிய படிவங்களை பூர்த்தி செய்து முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அதுவரை பணி மேற்கொள்ளும் ஒவ்வொரு அலுவலரும் கவனமுடன் செயல்பட்டு தேர்தல் நல்ல முறையில் நடத்தி முடித்திடவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, மகளிர் திட்ட இணை இயக்குநர் வானதி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) ராம்கணேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்) லோகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை ஓட்டல் உரிமையாளர் கொலையில் சிக்கிய 8 பேரிடம் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை ராமசாமி நகரை சேர்ந்த சகோதரர்கள் இளங்கோ (வயது 39), மணிவண்ணன்(28). இவர்கள் இருவரும் சேர்ந்து சிவகங்கை-மேலூர் ரோட்டில் புதிய ஓட்டல் திறந்தனர். சம்பவத்தன்று இரவு அண்ணன், தம்பி இருவரும் ஓட்டலில் இருந்தனர்.
அப்போது அவர்களது கடைக்கு வந்த 10 பேர் அடங்கிய கும்பல் மணிவண்ணனை வாளால் சரமாரியாக வெட்டியது. அவர்களை தடுத்த இளங்கோவையும், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து பலத்த வெட்டுக்காயங்களுடன் கிடந்த மணிவண்ணன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரும் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணி வண்ணன் பரிதாபமாக இறந்தார்.
ஓட்டலில் புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக மணிவண்ணன் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தீபாவளி பண்டிகையின்போது மணிவண்ணன் பட்டாசு கடை நடத்தியுள்ளார். அப்போது அவரது கடைக்கு வந்த சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (27) என்பவர் பட்டாசுகள் வாங்கிவிட்டு அதற்கு பணம் கொடுக்கவில்லை.
இதுகுறித்து கேட்டபோது மணிவண்ணன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடையில் இருந்த ஊழியர்கள் சக்திவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
அதற்கு பழி தீர்க்கும் விதமாக சக்திவேல் உள்ளிட்டோர் மணிவண்ணனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக சக்திவேல் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சக்திவேல், அவரது தம்பி வெற்றிவேல் (19), கார்த்திக் ராஜா (26), கொட்டகுடியை சேர்ந்த ஆகாஷ் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மற்றவர்களை போலீசார் தேடிவந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம்(27), சிவகங்கை போஸ் ரோடு சரவணக்குமார்(27), தொண்டி ரோடு அருண்பாண்டியன்(20), புதுப்பட்டி மதன்குமார்(19) ஆகிய 4 பேரும் கரூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
கோர்ட்டில் சரணடைந்த 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் கரூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அதேபோல் கைது செய்யப்பட்ட 4 பேரும் விசா ரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பத்தூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
மணிவண்ணன் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் அது குறித்து கண்டறிவதற்காக கைது செய்யப்பட்டு மற்றும் கோர்ட்டில் சரணடைந்து ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதற்கான நடவடிக்கையில் சிவகங்கை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 7-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் ராஜேஸ்வரி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2 முறை நகர்மன்ற உறுப்பினராக பணியாற்றி தற்போது 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
இவரது கணவர் ராஜேந்திரன். இவர் நேற்று மனைவிக்கு வாக்கு சேகரித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வள்ளியப்ப செட்டியார் ஊரணி அருகே வந்து கொண்டிருந்தார்.
தாயமங்கலம் மாரியம்மன் கோவில் பகுதியில் வந்தபோது ஹெல்மெட் அணிந்து வந்த 4 நபர்கள் ராஜேந்திரனை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இது குறித்து ராஜேந்திரன் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதில், முன்னாள் நகர்மன்றத்தலைவர் வேலுச்சாமி, அவரது அண்ணன் மகன் தர்மரா ஜன், காங்கிரஸ் கட்சி வேட் பாளர் ரேவதி தர்மராஜன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 4 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள் வழியில் சிக்கியவர்களை முட்டி தள்ளியது. எனினும் இளைஞர்கள் அதனை விரட்டி சென்று அடக்க முயன்றனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சு விரட்டு நடைபெறும். திறந்தவெளியில் நடைபெறும் இதனை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருவார்கள்.
இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நேற்று நடைபெற்றது. அரளிப்பாறை மலை மீதுள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சேவுகமூர்த்தி அய்யனார்கோயில் காளைகளுக்கு மரியாதை செய்து, காளைகளுக்கு வேஷ்டி, துண்டு வழங்கப்பட்டன. பிறகு தொழுவத்திலிருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும் மற்ற காளைகள் தொடர்ந்து அவிழ்க்கப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட 125 மாடுகள் மட்டும் ஜல்லிக்கட்டு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. எனினும் ஆங்காங்கே வயல்வெளிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், கட்டு மாடுகள் (தொழுவத்தில் அடைக்காத மாடுகள்) அவிழ்த்து விடப்பட்டன.
இதில் கூட்டத்தில் சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள் வழியில் சிக்கியவர்களை முட்டி தள்ளியது. எனினும் இளைஞர்கள் அதனை விரட்டி சென்று அடக்க முயன்றனர். மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் மேலூரை அடுத்த கிழையூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் (வயது 60) பலத்தகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுந்தரம் இறந்தார். மாடுகள் முட்டியதில் சுமார் 110 பேருக்கு மேல் காயமடைந்தனர். இதில் பலர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் எந்திரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இங்கு காரைக்குடி பழனிச்சாமி நகரை சேர்ந்த ராஜா ஆனந்த் (வயது 48) ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர் வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ஆசிரியர், மாணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவன் தொடர்ந்து செல்போனில் விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர், மாணவன் பற்றி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவரை அழைத்த முதல்வர், அவனது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து மாணவர், தாயாரை அழைத்து வந்துள்ளான். அப்போது, உங்கள் மகன் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். இதனால் மற்ற மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எனவே நீங்கள் மாற்றுச்சான்றிதழை வாங்கி சென்று விடுங்கள் என்று முதல்வரும், ஆசிரியரும் கூறியுள்ளனர்.
இதைதொடர்ந்து மகனை கண்டிப்பதாக அவர் கூறினார். அப்போது இது தான் கடைசி முறை, இனி தவறு செய்தால் மன்னிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர்.
அதன்பின் நேற்று காலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்புகள் வழக்கம்போல் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அந்த மாணவரும் வழக்கம்போல் வகுப்பிற்கு வந்துள்ளான். ஓவிய ஆசிரியர் ராஜா ஆனந்த், வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். அருகில் மற்ற வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தன.
அப்போது அங்கு சென்ற மாணவர் ஓவிய ஆசிரியரிடம் நான் தவறுதலாக நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறியுள்ளான். அதற்கு ஆசிரியர் எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் சென்று பேசுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தினான். இதனால் அலறியவாறு ரத்தம் சொட்டச்சொட்ட அவர் கீழே விழுந்தார்.
அவரது சத்தம் ேகட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிவந்து மாணவரை பிடித்துக்கொண்டனர். படுகாயம் அடைந்த ஆசிரியர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.

பிரான்பட்டியில் ஒத்திவைக்கப்பட்டிருந்த கணினி திருத்த முகாம் நாளை நடைபெற உள்ளது.
சிவகங்கை
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் பிரான்பட்டி கிராமத்தில் மட்டும் மஞ்சுவிரட்டு காரணமாக நடைபெற இருந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த முகாம் நாளை(17&ந்தேதி) நடைபெறுகிறது. பொதுமக்கள் மேற்கண்ட கிராமத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.