என் மலர்
உள்ளூர் செய்திகள்

கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய அணி வீராங்கனைகள்.
தென் மண்டல பல்கலைக்கழக பெண்கள் கபடி போட்டி
காரைக்குடி அருகே தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி நடந்தது.
காரைக்குடி
இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடிபோட்டி தொடக்கவிழா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.
பல்கலைக்கழக துணைவேந்தர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், கருப்புசாமி தலைமை தாங்கினர். உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் இருந்து 53 அணிகள் பங்கேற்கின்றன. 800 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.
முதல் நாள் நடந்த போட்டியில் பாரதிதாசன் பல்கலை அணி 28-22 என்ற வித்தியாசத்தில் கர்நாடகா பல்கலை அணியையயும், ஆந்திர பல்கலை அணி 40-30 என்ற கணக்கில் மகாராணி கிளஸ்டர் பல்கலை அணியையும் தோற்கடித்து வெற்றிபெற்றது.
ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலை அணி 23-9 என்ற கணக்கில் நூருல் இஸ்லாம் பல்கலை அணியையும், அண்ணா பல்கலை அணி 34-32 என்ற கணக்கில் ராயலசீமா பல்கலை அணியையும், உஸ்மானியா பல்கலை அணி 40-36 என்ற கணக்கில் குவேம்பு பல்கலை அணியையும் தோற்கடித்து வெற்றிபெற்றது.
கண்ணூர் பல்கலை அணி 46-32 என்ற கணக்கில் காகத்திய பல்கலை அணியை வென்றது. முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் சேகர் வரவேற்றார். ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த போட்டிகள் வருகிற 26ந்தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது.
Next Story






