என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை நகராட்சி
தேவகோட்டை நகராட்சியை கைப்பற்றுவது யார்?
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையை கைப்பற்றுவதில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன்முறையாக தேர்தலை சந்தித்தது.
இந்த மாவட்டத்தில் ஏற்கனவே சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி நகராட்சிகள் உள்ளன. 4 நகராட்சி வார்டுகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகளில் 10 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 6 வார்டுகளையும், தி.மு.க., அ.ம.மு.க. தலா 5 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் இந்த நகராட்சியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தி.மு.க.. அ.தி.மு.க. சமவிகிதத்தில் உள்ளதால் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் தி.மு.க. 11 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், காங்கிரஸ், அ.ம.மு.க. தலா 3 வார்டுகளிலும், சுயேட்சை 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.
காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 13 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 6 வார்டுகளிலும், அ.தி.மு.க.வினர் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 14, சுயேட்சை 7, அ.தி.மு.க. 5, பா.ஜனதா 1 இடங்களை பிடித்துள்ளன. ஏற்கனவே பேரூராட்சியாக இருந்தபோது மானாமதுரை தி.மு.க. வசம்தான் இருந்தது.- தற்போது நகராட்சியாக மாறியபிறகும் தி.மு.க.வே முதல் முறையாக நகராட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






