என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்களிக்க வந்த மூதாட்டி.
நெற்குப்பை பேரூராட்சியில் 79.91 சதவீத வாக்குப்பதிவு
நெற்குப்பை பேரூராட்சியில் 79.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருப்புத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் 5வது வார்டில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 11 வார்டுகளுக்கு நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.
இதில் 1வது வார்டில் 648 வாக்குகளில் 570 வாக்குகளும், 2வது வார்டில் 390 வாக்குகளில் 311 வாக்குகளும், 3வது வார்டில் 642 வாக்குகளில் 511 வாக்குகளும், 4வது வார்டில் 769 வாக்குகளில் 623 வாக்குகளும், 6வது வார்டில் 260 வாக்குகளில் 181 வாக்குகளும் பதிவானது.
7வது வார்டில் 362 வாக்குகளில் 279 வாக்குகளும், 8வது வார்டில் 444 வாக்குகளில் 372 வாக்குகளும், 9வது வார்டில் 587 வாக்குகளில் 434 வாக்குகளும், 10வது வார்டில் 245 வாக்குகளில் 177 வாக்குகளும், 11வது வார்டில் 699 வாக்குகளில் 555 வாக்குகளும், 12வது வார்டில் 866 வாக்குகளில் 711 வாக்குகளும் என மொத்தம் 79.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.
Next Story






