என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டா திருத்த முகாம்
கணினி பட்டா திருத்த முகாம்
சிவகங்கையில் கணினி பட்டா திருத்த முகாம் நாளை நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டுசெல்லும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் கணினி திருத்த சிறப்புமுகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
அதன் தொடர்ச்சியாக நாளை (23ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் அமராவதி கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் குருந்தனக்கோட்டை கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் தானிப்பட்டி கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் மாந்தகுடிபட்டி கிராமத்திலும் கணினிபட்டா திருத்த முகாம்கள் நடக்கிறது.
அதேபோன்று சிவகங்கை வட்டத்தில் அலவாக்கோட்டை கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் மாங்குளம் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் மாங்குடி கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் நாகமுகுந்தன்குடி கிராமத்திலும், காளையார் கோவில் வட்டத்தில் சிலுக்கப்பட்டி கிராமத்திலும் நாளை கணினி பட்டா திருத்த முகாம்கள் நடக்கிறது.
பொதுமக்கள் இந்த கிராமங்களில் நடைபெறும் சிறப்புமுகாமில் கலந்துகொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






