என் மலர்
சிவகங்கை
- இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது.
வருகிற 28-ந் தேதி (புதன் கிழமை)காலை 10 மணியளவில் சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் இளை யான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 'மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்" நடைபெறும்.
இதில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 18 வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.
மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரைக்குடியில் செருப்பு குடோனில் தீ விபத்தில் ரூ. ரூ.பல லட்சம் செருப்புகள் எரிந்து நாசகியது.
- 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செகண்ட் பீட் அருகே உள்ள டாக்சி ஸ்டாண்ட் பகுதியில் தனியார் செருப்பு குடோன் உள்ளது.
பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த குடோனில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீப்பற்றி எரிந்தது. குடோனில் இருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து சேதமானது.
காரைக்குடி தீயணைப்பு நிலையம் ஊருக்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்ததால் தீயை அணைக்க வருவதற்கு தாமதம் ஆனது.அதன் பின்பு காரைக்குடி, தேவகோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- அரசியலில் ஆன்மீகத்தையும், ஆன்மீகத்தில் அரசியலையும் கலக்கக்கூடாது என கவிஞர் வைரமுத்து பேட்டியளித்தார்.
- இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.
சிவகங்கை
சிவகங்கையில் கவிஞர் இலக்கியா நடராஜனின் "பெயர் தெரியாத பறவை" என்ற கவிதை நூல் மற்றும் "மயானக்கரை ஜன்னங்கள்" சிறுகதை நூல் ஆகியவை வெளியிட்டு விழா நடை பெற்றது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், கவிஞர் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., நக்கீரன் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் கவிஞர் வைர முத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-
அரசியல் வழியே ஆன்மீகமும், ஆன்மீகத்தின் வழியே அரசியலும் எல்லா நூற்றாண்டுகளிலும் எல்லா தேசிய இனங்களிலும், எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன.
பல நேரங்களில் அரசி யலையே ஆன்மீகம் தான் தீர்மானித்தது. இந்த வரலாற்றையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அரசியலில் குரல்வளையை ஆன்மீகம் பிடிப்பதும், ஆன்மீகத்தின் குரல்வளையை அரசியல் பிடிப்பதும் தகாது என்பது என் எண்ணம். இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப், சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சாந்தி மூக்கையா என்பவருக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளும்படி வருவாய் துறை மூலம் கால அவகாசத்துடன் தகவல் அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட நபர் நடவடிக்கையும் எடுக்காததால் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் ஏனைய பகுதிகளை அகற்றினர். மேலும் சம்பந்தப்பட்ட நபருக்கு தகுதி அடிப்படையில் அதே பகுதியில் வசிப்பதற்கு வேறொரு இடமளிக்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், நாச்சியாபுரம் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிளி மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் உடன் இருந்தனர்.
- சாகிர் உசேன்கல்லூரி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- இந்த முகாமில் 110 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவித்திட்ட அலுவலர் விஜயசங்கரி வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். இதில் 18 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 110 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதல்வர், உதவித்திட்ட அலுவலர், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பணிநியமன ஆணை வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை மகளிர் சுயஉதவிக்குழு பணியாளர்களுடன், கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் இப்ராஹிம், உதவிப்பேராசிரியர்கள் ஜெயமுருகன், சுல்தான் செய்யது இப்ராஹிம், மகேந்திரன் மற்றும் ஆரிப்ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர். இளையான்குடி, வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
- சிங்கம்புணரி அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியது.
- கிடா வெட்டி படையலிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டியில் மட்டிக்கண்மாய் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் இது பிரமாண்ட ஏரி ஆகும்.
இந்த கண்மாயில் இருந்து மட்டிக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, சிங்கம்புணரி, மணப்பட்டி, குமரத்த குடிப்பட்டி, காளாப்பூர் ஆகிய 6 கிராமங்களில் சுமார் 2500 ஹெக்டேர் ஆயக்கட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த தண்ணீர் மட்டிக்கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டு மட்டிக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மட்டிக்கண்மாய் சில தினங்களுக்கு முன்பு நிரம்பி மறுகால் பாய்ந்தது.
குறிப்பாக ஆவணி மாதத்தில் இந்த கண்மாய் 50 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக மறுகால் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை கொண்டாடும் வகையில் ஆயக்கட்டு தலைவர் மதிசூடியன் தலைமையில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தலைமடை பகுதியில் படையலிட்டு அன்னதானம் வழங்கினர்.
அதனை தொடர்ந்து கிடா வெட்டி படையலிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- காரைக்குடி ரெயில் நிலையத்தில் முன்பதிவு இடம் மாற்றப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
- பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடமும், தினசரி ரெயில்களுக்கு டிக்கெட் வழங்கும் இடமும் தனித்தனியாக இருந்தன.
காரைக்குடி
காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடமும், தினசரி ரெயில்களுக்கு டிக்கெட் வழங்கும் இடமும் தனித்தனியாக இருந்தன.
இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் 2 கவுண்டர்களையும் ஒரே இடமாக மாற்றியது.இதனால் காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு தினமும் 250 பயணிகள் முன்பதிவு செய்வதாகவும், நாள் ஒன்றுக்கு பலலட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும் தெரிகிறது.
தற்போது தினசரி ரெயில்களுக்கு பயணிகள் அதிகமாக டிக்கெட் எடுப்பதால், முன்பதிவுக்கு செல்பவர்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. சில நேரங்களில் டிக்கெட் வழங்கும் ஊழியருக்கும், பயணிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.
எனவே, காரைக்குடி ரெயில் நிலையத்தில் பழைய முறைப்படியே தனித்தனியாக டிக்கெட் கவுண்டர்கள் அமைக்க வேண்டும் என தொழில் வணிகக் கழகத்தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
- திருப்பத்தூர் வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவுத்தூண் பகுதிகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு 2 நாள் பயணமாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை புரிந்தார். அந்த பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் மணிமண்டபம் மற்றும் நினைவுத்தூண் பகுதிகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக பிள்ளை யார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஜே.பி.நட்டா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பத்தூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் சேதுசிவராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குடும்ப ஆட்சியால், தமிழக மக்கள் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள் என பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசினார்.
- தமிழக மக்கள் தற்போது கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
காரைக்குடி
சிவகங்கை மாவடடம் காரைக்குடி என்.ஜி.ஓ. காலனி பகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா சிறப்பு பொதுக்கூட்டம் நடை பெற்றது.
பா.ஜனதா சிவகங்கை மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித.பழனிசாமி வரவேற்று பேசினார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா காலத்தில் பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு நமது நாட்டு மக்களை காப்பாற்றினார். அதோடு உலக நாடுகளுக்கும் உதவி செய்து உலகின் உன்னத தலைவர் ஆனார்.
சுகாதாரம், கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி அதற்காக ஏராளமான நிதி ஒதுக்கீடுகள் செய்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை
இது சம்பந்தமான பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டுக்கும் ஏராள மான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏற்கனவே வழங்கிய நிதி ஒதுக்கீடு தவிர கூடுதலாக வும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
தமிழகத்தின் ெரயில் நிலையங்கள், துறை முகங்கள், விமான நிலை யங்கள் நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்டு வரு கின்றன.விவசாயிகள் மேம்பாட்டிற்காகவும், ஏழை மக்களின் நலனுக்காகவும் பிரதமர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் தமிழகம் பயன்பெறுவது அதிகம். உற்பத்தியில் இறக்குமதி என்ற நிலையில் இருந்த இந்தியாவை தற்போது ஏற்றுமதி என்று நிலைக்கு பா.ஜனதா ஆட்சி கொண்டு வந்துள்ளது. உலகமே பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் இந்த நேரத்தில் இந்தியா பொருளாதார வளர்ச்சி யில் மிக வேகமாக முன்னேறி வருகிறது.
பா.ஜனதா, கொள்கை பிடிப்புள்ள கட்சி. பா.ஜனதா மட்டுமே தற்போது இந்தியாவில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் பிராந்திய கட்சிகளாக சுருங்கி வருகின்றன. குடும்ப ஆட்சி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலத்தில் குடும்ப ஆட்சியும், குடும்ப அரசியலும் நடைபெறுகிறது.
தமிழக மக்கள் தற்போது கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
இதை நான் நன்கு புரிந்துகொண்டேன்.
நம்பிக்கையோடு காத்திருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை பா.ஜனதா கட்சி தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவையொட்டி ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி பற்றிய நூலை நட்டா வெளியிட அதனை பா.ஜனதா பட்டியல் சமுதாய பிரிவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் விசுவநாத கோபாலன் பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி முருகன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், சிவகங்கை மாவட்ட தலைவர் க.பூப்பாண்டி, மாநில செயலாளர்கள் பி.ஆர்.துரைப்பாண்டி, கல்லூர் என்.ரஞ்சித்குமார், மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட துணைத்தலைவர் பி.என்.வைரவசுந்தரம், மாவட்ட செயலாளர் மெ.மதன் உள்ட பலர் கலந்து கொண்டனர்.
- இளையோர் திருவிழா போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும் சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா நடத்தும் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா விரைவில் நடைபெற உள்ளது.
நேரு யுவகேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் நிறைவடையும். இந்த வாய்ப்பை சிவகங்கை மாவட்ட இளைஞர்களும், மாணவ- மாணவிகளும் பயன்படுத்தி திறமைகளை வெளிப்படுத்தலாம்.
1)இளம் எழுத்தாளர் போட்டி கவிதை, 2) இளம் கலைஞர் போட்டி ஓவியம், 3)கைபேசி புகைப்பட போட்டி, 4)பிரகடன பேச்சுப்போட்டி, 5)இளையோர் சொற்பொழிவு, 6)கலைத்திருவிழா ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன. வயது வரம்பு 15 முதல் 29 வரை இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
வரிசை எண் 1 முதல் 3 வரை உள்ள போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.1,000, 2-ம் பரிசு ரூ.750, 3-ம் பரிசு ரூ.500, பிரகடன போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1,000, கலைப்போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2,500, 3-ம் பரிசு ரூ. 1,250.
இளையோர் சொற்பொழிவு நிகழ்வில் சிறப்பாக செயல்படும் 4 இளைஞர்களுக்கு தலா ரூ.1,500-, வீதம் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி இடங்களை பிடித்த இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். முன்பதிவிற்கு முன்பதிவு செய்ய கடைசி நாள்-26.9.2022 மாலை 5 மணி ஆகும்.
மேலும் தகவலுக்கு - 95664 53901, அலுவலகம்-04575 290399 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கையில் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார்.
- வேலை செய்யாமல் இருக்கும் அதிகாரிகளை கடிந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் திட்ட இயக்குநர் சிவராமன் தலைமையில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் திட்ட இயக்குநர் பேசுகையில், பல்வேறு ஊராட்சி மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு அரசுக்கு வருவாய் வருகிறது. தற்போது பல ஊராட்சிகளில் பணிகளை விரைந்து முடிக்க ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக அனுமதி வழங்காமல் கிடப்பில் கிடக்கும் அனைத்து பணிகளையும் ஆராய்ந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேலை செய்யாமல் இருக்கும் அதிகாரிகளை கடிந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும்.
பள்ளிக்கு தேவையான பிரேயர் தளம், பள்ளி கட்டிடம், சுற்றுச் சுவர், சமையல் கூடம் இல்லாத ஊராட்சிகளுக்கு பணி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெரியாத அதிகாரங்களை விளக்கி கூறினார்.
இதில் கலந்து கொண்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் திட்ட இயக்குநரை பாராட்டியதுடன் 3 மாதங்களுக்கு ஒரு முறை இது போன்று அழைத்து கூட்டம் நடத்தினால் பயனளிக்கும் என்று மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் மணிகண்டன் உட்பட அனைவரும் தெரிவித்தனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினவேல், ஜெகநாத சுந்தரம் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூரில் சாலையில் திரிந்த மாடுகளை பணியாளர்களை கொண்டு பிடித்து அகற்றினர்.
- பல்வேறு பகுதிகளில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தன.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை மதுரை சாலை, சிவகங்கை சாலை, 4 ரோடு, பெரிய கடை வீதி, மூலக்கடை வீதி, அச்சு கட்டு, வானியண் கோவில் தெரு, செட்டிய தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தன.
இந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தெருக்கள் வீதிகளில் சுற்றி திரிந்த மாடுகளை பணியாளர்களை கொண்டு மாடுகளை பிடித்து அகற்றினர். இதுபோன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் தெருக்களில் உரிமையாளர்கள் மாடுகளை தெருவில் விடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






