என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆன்மீகத்தையும், அரசியலையும் கலக்கக்கூடாது-வைரமுத்து
  X

  காரைக்குடியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  ஆன்மீகத்தையும், அரசியலையும் கலக்கக்கூடாது-வைரமுத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசியலில் ஆன்மீகத்தையும், ஆன்மீகத்தில் அரசியலையும் கலக்கக்கூடாது என கவிஞர் வைரமுத்து பேட்டியளித்தார்.
  • இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.

  சிவகங்கை

  சிவகங்கையில் கவிஞர் இலக்கியா நடராஜனின் "பெயர் தெரியாத பறவை" என்ற கவிதை நூல் மற்றும் "மயானக்கரை ஜன்னங்கள்" சிறுகதை நூல் ஆகியவை வெளியிட்டு விழா நடை பெற்றது.

  இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், கவிஞர் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., நக்கீரன் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் கவிஞர் வைர முத்து சிறப்புரையாற்றினார்.

  பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

  அரசியல் வழியே ஆன்மீகமும், ஆன்மீகத்தின் வழியே அரசியலும் எல்லா நூற்றாண்டுகளிலும் எல்லா தேசிய இனங்களிலும், எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன.

  பல நேரங்களில் அரசி யலையே ஆன்மீகம் தான் தீர்மானித்தது. இந்த வரலாற்றையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அரசியலில் குரல்வளையை ஆன்மீகம் பிடிப்பதும், ஆன்மீகத்தின் குரல்வளையை அரசியல் பிடிப்பதும் தகாது என்பது என் எண்ணம். இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×