என் மலர்
சிவகங்கை
- சிங்கம்புணரி அருகே குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க தென்னை மரங்களில் பாம்பு ஓவியத்தை விவசாயிகள் வரைந்தனர்.
- இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை வளர்க்கும் விவசாயிகள் சிலர் பருவமழையை நம்பி மானாவாரியாகவும், மற்ற விவசாயிகள் கிணற்று பாசனத்திலும் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இங்கு மலைபகுதிகளும், வனப்பகுதிகளும் அதிகம் உள்ளதால் குரங்குகள் ஏராளமாக இருக்கிறது. அவை உணவு தேடி கிராம பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள வயல் மற்றும் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகிறது.
பிரான்மலை வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் அணில்கள் இந்த தென்னை மரத்தை தேடி வந்து தென்னை மரத்தில் ஏறி அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை கடித்தும் பறித்தும் சேதப்படுத்துவதியும், அதில் உள்ள தண்ணீரை குடித்தும் விடுகிறது.
இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. ரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், அவைகளிடம் இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் முதலில் ஒரு சில மரங்களில் முள்வேலி அமைத்து பார்த்தனர். அதை குரங்குகள் லாவகமாக அகற்றிவிட்டு மேலே ஏறி சென்று தேங்காய்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் தற்போது வித்தியாசமாக புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பாம்பு நெளிவது போன்ற ஓவியத்தை தனித்தனியாக ஒவ்வொரு தென்னை மரத்திலும் பெயிண்டு மூலம் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தை காணும் குரங்குகள் மற்றும் அணில்கள் தென்னை மரத்தில் நிஜபாம்புதான் இருக்கிறது என நினைத்து பயந்துபோய் மரத்தில் ஏறாமல் அங்கிருந்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஒடுவன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வீரனன் கூறியதாவது:-
இந்த பகுதியில் குரங்குகள் அதிகமான அளவில் தொந்தரவு செய்து தேங்காய் விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குரங்குகள் தென்னை மரத்தின் மீது ஏறி குறும்பைகள், இளநீர் காய்கள் மற்றும் பூக்களை சேதப்படுத்துவதால் தென்னை மரத்தில் அதிக விளைச்சல் காண முடியவில்லை.
குரங்குகளுக்கு பாம்பு என்றால் பயம் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அதை மனதில் வைத்து எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்துள்ளேன். தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்ததால் இந்த படத்தை பார்த்த குரங்குகள் நிஜ பாம்பு என்று பயந்து மரத்தில் ஏறுவதில்லை. இதனால் எனக்கு தென்னை விவசாயத்தில் சரியான மகசூல் கிடைத்து வருகிறது.
இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து குரங்குகள் அட்டகாசம் செய்தால் பாம்பு ஓவியத்தை தென்னை மரத்தில் விவசாயிகள் அனைவரும் வரைந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
- அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கையில் தனிப்பெரும் கருணை வள்ளலாரின் 200-வது முப்பெரும்விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இதில்அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 45 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வள்ளலாரின் போதனைகள் அடங்கிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
இந்த விழாவில் வள்ள லாரின் கொள்கைகளை வலியுறுத்தும் தலைப்பு களில் பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் கவிதைப் போட்டி போன்றவை மன்னர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 177 பேர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மூத்த சன்மார்க்கிகள் 12 பேருக்கு வெள்ளி டாலர்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்கவர்களை கவுரவிக்கும் வகையிலும், எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி மற்ற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ்,காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
- சுவரொட்டிகளும், சீரணி அரங்கம் முன் பகுதியில் எதிர்ப்பு பேனரும், போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பேரூராட்சி கட்டிடம் 70 ஆண்டுகளுக்கு முன்பு 19.11.1953-ல் திறப்பு விழா கண்டது. இந்த பழைய கட்டிடம் போதிய வசதி இல்லாததாலும், பழைய கட்டிடம் என்பதாலும், சீரணி அரங்கம் பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட கருத்து கேட்டு அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஒருமனதாக ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினர். அனைத்து கட்சி நிர்வாகிகளிடமும் கையெழுத்தும் பெறப்பட்டது.
2015 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இதே சீரணி அரங்கம் பகுதி காலி இடத்தில் அம்மா விளையாட்டு அரங்கம் கட்ட தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இதை ஆட்சேபித்து சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது தி.மு.க. நிர்வாகம் சீரணி அரங்கம் பகுதியில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் சீரணி அரங்கை இடித்துவிட்டு புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டக்கூடாது என்று சிங்கம்புணரி ஒன்றிய பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் நிர்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
பாரம்பரியமிக்க சீரணி அரங்கத்தை இடிக்க கூடாது, சீரணி அரங்கை தவிர்த்து மாற்று இடத்தில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்ட வேண்டும் என பா.ஜ.க. ஊடகப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டன.
மேலும் சீரணி அரங்க திடலை பாதுகாப்போம் என்று சிங்கம்புணரி நகர் பகுதி முழுவதும் சுவரொட்டிகளும், சீரணி அரங்கம் முன் பகுதியில் பேனரும், போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிவகங்கையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
- அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம், அ.திருவுடை யார்புரம் உள்வட்டம், முள்ளிரேந்தல் குரூப், அ.நெடுங்குளம் கிராமத்தில், வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை நாலுகோட்டை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டஉதவி மையம், சிவகங்கை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுகள் இணைந்து சிவகங்கை வட்டம் நாலுகோட்டை கிராமத்தில் மனித உரிமைகள் கருத்தரங்கு மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவை பற்றி விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது.
மாவட்ட வக்கீல் சங்க செயலர் சித்திரைசாமி, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியில் ஆய்வாளர் கண்ணதாசன், நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் பேசினர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராணி நன்றி கூறினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், மஞ்சுளா, செல்வி, பெண் காவலர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
- சிங்கம்புணரி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
- ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றி யங்களில் வேலைவாய்ப்பு முகாம், பள்ளி மற்றும் மயான பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நியாயவிலைக் கடை திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தனியார் கல்வி நிறுவனமான எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஒன்றிய, நகர தி.மு.க. ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான ஆணையை முகாமில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பாக ரூ.19 லட்சம், அரசு நிதியில் இருந்து ரூ.38 லட்சம் என மொத்தம் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மேல்நி லைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடந்தது.
மேலும் முஸ்லிம்களின் மயான பகுதிக்கு சுற்றுச்சுவர் கட்ட அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சம், அரசு நிதி ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சார்பில் முறையூர், அரளிப்பட்டி, கிருங்கா கோட்டை, சூரக்குடி, காளாப்பூர், சிங்கம்புணரி போன்ற பகுதிகளில் உள்ள 91 பயனாளிகளுக்கு ரூ.27.01 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், புதிய வாகனம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு மற்றும் பிரான்மலை ஊராட்சி போன்ற பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கையான முழுநேர புதிய நியாய விலை கடைகளை அமைச்சர் திறந்து வைத்து அந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுயநிதி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கோ.ஜினு, துணைப் பதிவாளர் குழந்தை வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல்,ஆவின் பால்வளத் தலைவர் சேங்கை மாறன், பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது, கவுன்சிலர் செந்தில் கிருஷ்ணன், 2-வது வார்டு கவுன்சிலர் முகமது நிஷா ஷேக் அப்துல்லா, பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அனைத்து பேரூராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி
மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அனைத்து பேரூராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி தாலுகாவில் கண்டனூர், புதுவயல், பள்ளத்தூர், கோட்டையூர், கானாடுகாத்தான் பேரூராட்சிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்-சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்நாதன், மாசான், சுப்பிரமணியன், முருகன், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், மாணிக்கம், சேகர், குணசேகரன்.
முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ஆறுமுகம், நரிவிழி கிருஷ்ணன், முருகன், சிதம்பரம், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவி மீனாள், ஒன்றிய துணை செயலாளர் வைரவபுரம் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
- திருப்பத்தூர், நெற்குப்பையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், நெற்குப்பை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் உள்ள பஸ் நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வழிகாட்டு தலின்படி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவரும், மாவட்ட பாம்கோ சேர்மனுமான ஏவி.நாகராஜன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஏ.எல்.சிவானந்தம் (எ)போஸ், மாவட்ட சேர்மன் பொன்மணி.பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவருமான கரு.சிதம்பரம், ஒன்றிய செயலா ளர்கள் குணசேகரன், வடிவேல், செந்தில்.மா
வட்ட பேரவை துணை செயலாளர் முருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜா முகமது, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஆசிப் இக்பால், மாவட்ட வக்கீல் பிரிவு அழகர்சாமி, ராபின் சையது முகமது, ராஜசேகர், நகர துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சின்னையா, ஆறுமுகம்.
நெற்குப்பை பேரூர் செயலாளர் அடைக்கப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் நாகராஜன், மாவட்ட பேரவை பொருளாளர் நேரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொங்கல் பரிசு வழங்கவே தி.மு.க. அரசு யோசிக்கிறது என முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
- வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
சிவகங்கை
சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டையில் சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க நகரசெயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கொரோனா காலத்தில் கூட பொது மக்களுக்கு பொங்கல் பரிசு, உதவி தொகைகளை வழங்கியது. வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
தற்போதைய தி.மு.க. அரசு பொங்கல் பரிசு வழங்கவே யோசித்து வருகிறது. இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுமக்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப தயாராகுங்கள் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, கருணா கரன், அருள்ஸ்டிபன் உள்ளிட்ட பலர் பேசினர்.
நிர்வாகிகள் மாரியப்பன், செல்வம், கவுன்சிலர் சின்ன மருது, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், அவைத்தலைவர் பாண்டி, கேபி.முருகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிகுமார், பாபு, மாவட்ட பாசறை துணைச்செயலாளர் சதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது.
- இந்த கண்காட்சியை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பார்வையிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமிர்த பெருவிழா 3 நாட்கள் நடந்து வருகிறது. இதில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
சிவகங்கையில் விடுபட்ட, அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் சிலரின் புகைப்படங்களை சேர்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செல்வமணி, கோபி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
- 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிவகங்கை
தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை, குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்), சுதர்சனம் (மாதவரம்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோருடன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துறைகள் ரீதியாக களஆய்வுகள் மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன்,எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி (மானாமதுரை), சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி,துணைச் செயலாளர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.
காரைக்குடி வட்டத்தி ற்குட்பட்ட அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், காரைக்குடி ஆதிதிராவிடர் நலத்துறையின் அரசினர் மாணவிகள் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், காரைக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் இயற்கை மற்றும் யோகா பிரிவில் தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியமர்த்த வேண்டிய பிரிவின் பணியாளர்கள், மருந்துகளின் இருப்புகள் குறித்தும் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு மையம் மற்றும் அருங்காட்சியகப் பணிகளின் நிலை குறித்தும், பையூர் ஊராட்சியில், பழமலைநகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பித்தல் முறை மற்றும் மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தனர்.
பின்னர் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெ ருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், சிறப்பான நிர்வாகத்தை வெளிப்ப டைத் தன்மையுடன் அரசு மேற்கொள்ளும் வகையில், இந்த குழு அடிப்படை யாக திகழ்கிறது. எங்களுக்கு அளிக்கப்படும் விவரங்கள் பரிசீலனை க்கு உட்படுத்தப்பட்டு, அரசிற்கு இந்த குழு வாயிலாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த நிகழ்வின்போது, பல்வேறு துறைகள் சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
- இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவி லான கலைத்திருவிழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதலமைச்சரால் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டு வரும் திட்டங்களின் அடிப்படையில், கல்வி பயில்வதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாணவர்களின் திறனை வெளிக்கொணருவ தற்கென தற்போது பள்ளிக்கல்வி துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்வி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டார அளவில் பங்கு பெற்றுள்ளனர்.
இந்த கல்வித்திரு விழாவில் ஒவ்வொரு வகுப்புகளின் பிரிவின் அடிப்படையில் தனிப்போட்டிகளும், குழுப்போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
இதில் முதலிடம் பெறவுள்ள மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கிறார்கள்.
அதில் வெற்றி பெறும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் கல்வி சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புக்களையும் பெற உள்ளனர். இதுதவிர, மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு எனது சார்பிலும், ஊக்கத்தொகையாக முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கி, எதிர்கால இந்தியாவிற்கு வலு சேர்க்கும் வகையில் தங்களது பங்களிப்பை அளித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






