என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பேரூராட்சி கட்டிடம் கட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு
    X

    பேரூராட்சிக்கு சொந்தமான சீரணி அரங்கம்.

    புதிய பேரூராட்சி கட்டிடம் கட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு

    • சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
    • சுவரொட்டிகளும், சீரணி அரங்கம் முன் பகுதியில் எதிர்ப்பு பேனரும், போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பேரூராட்சி கட்டிடம் 70 ஆண்டுகளுக்கு முன்பு 19.11.1953-ல் திறப்பு விழா கண்டது. இந்த பழைய கட்டிடம் போதிய வசதி இல்லாததாலும், பழைய கட்டிடம் என்பதாலும், சீரணி அரங்கம் பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட கருத்து கேட்டு அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஒருமனதாக ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினர். அனைத்து கட்சி நிர்வாகிகளிடமும் கையெழுத்தும் பெறப்பட்டது.

    2015 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இதே சீரணி அரங்கம் பகுதி காலி இடத்தில் அம்மா விளையாட்டு அரங்கம் கட்ட தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இதை ஆட்சேபித்து சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

    தற்போது தி.மு.க. நிர்வாகம் சீரணி அரங்கம் பகுதியில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

    இந்த நிலையில் சீரணி அரங்கை இடித்துவிட்டு புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டக்கூடாது என்று சிங்கம்புணரி ஒன்றிய பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் நிர்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

    பாரம்பரியமிக்க சீரணி அரங்கத்தை இடிக்க கூடாது, சீரணி அரங்கை தவிர்த்து மாற்று இடத்தில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்ட வேண்டும் என பா.ஜ.க. ஊடகப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டன.

    மேலும் சீரணி அரங்க திடலை பாதுகாப்போம் என்று சிங்கம்புணரி நகர் பகுதி முழுவதும் சுவரொட்டிகளும், சீரணி அரங்கம் முன் பகுதியில் பேனரும், போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×