என் மலர்
சிவகங்கை
- எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இதில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், நகரச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் தசரதன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
- புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி நடந்தது.
- ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் உள்ள புகழ் மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
முன்னதாக நள்ளிரவு12 மணிஅளவில் குழந்தை ஏசு பிறக்கும் காட்சி தத்ரூபமாக குடில் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைதொடர்ந்து ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
வருங்காலங்களில் பெரும் நோய் தொற்றுகள் ஏற்படக்கூடாது, இயற்கை சீற்றங்களின்றி மக்கள் அமைதியுடன்-மகிழ்ச்சி யுடன் வாழ ஜெபம் செய்யப்பட்டது. நள்ளிரவு திருப்பலிபூஜை நிறைவு பெற்றவுடன் புனித குழந்தை தெரசாள் ஆலயபங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
- எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- கனகவள்ளி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்குடி
எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளை முன்னிட்டு அரியக்குடியில் அவரது படத்திற்கு சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.- முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், மாசான், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, கிளைச் செயலாளர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர்.சித்ராதேவி, கவுன்சிலர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, கனகவள்ளி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
- காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ். அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர். அசோகன் வழிகாட்டுதலின்படி காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் பாலா தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், நகர மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வட்டாரந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
- சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மாற்றுத்திற னாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத்தி றனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து வட்டார அளவிலும் நடைபெற உள்ளது.
முதலில் 3.1.2023 அன்று திருப்புவனம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 6.1.2023 அன்று மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10.1.2023 அன்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 12.1.2023 அன்று காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 13.1.2023 அன்று கண்ணங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 20.1.2023 அன்று தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 24.1.2023 அன்று சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27.1.2023 அன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 31.1.2023 அன்று எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், முகாம்கள் நடக்கிறது.
1.2.2023 அன்று சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 3.2.2023 அன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 8.2.2023 அன்று சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில் 8 மார்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமத்துவபுர வீடுகளின் உரிமையாளர்களுக்கு பட்டா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி சமத்துவபுரத்திற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வருகை புரித்தார். அவரை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதனை தொடர்ந்து பெரியார் நினைவு தினத்தையொட்டி இங்குள்ள சிலைக்கு அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் மாலை அணி வித்து மரியாதை செய்தார். சமத்துவபுர வீடுகளுக்குள் சென்று அவர் ஆய்வு செய்ய வந்தபோது பெண்கள் ஆரத்தி எடுத்து, திலகமிட்டு வரவேற்றனர்.
அவரை குழந்தைகள் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றனர். குழந்தைகளிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், செல்பி எடுக்கலாமா என்று குழந்தைகள் கேட்க மொபைல் போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார்.
ஆட்டோ கிராப்பும் போட்டுக்கொடுத்தார். குழந்தைகள் பூங்கா வேண்டும் என்று கேட்க உடனே பூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
முன்னதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வரவேற்றார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கலைஞர் வீடு வழங்கினார். அவரது பேரனாகிய நான் பட்டா வழங்கு கிறேன் என்று கூறியதுடன் 100 சமத்துவபுர வீடுகளின் உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கினார்.
கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் ரூ.200 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்திருந்த நிலையில், முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் சுமார் ரூ.9 கோடியில் 7 சமத்துவ புரங்களில் உள்ள வீீடுகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இ்ந்த நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், கோட்டாட்சியர் பால் துரை, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, தனி வட்டாட்சியர் கண்ணதாசன், வருவாய் அலுவலர்கள் மன்சூர்அலி, ரமேஷ், கண்ணன், வேல்முருகன், ஒன்றிய சேர்மன் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு, சுகாதாரத் துறை துணை இயக்குநர் விஜயசந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- இடைக்காட்டூர் திருஇருதய திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
- ஏற்பாடுகளை திருத்தல அருட் பணியாளர் இமானு வேல் தாசன் செய்து வருகிறார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் 140 ஆண்டுகள் புகழ் மிக்க திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இங்கு ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு நாளாக கருதப்படுகிறது.
அன்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெறும் சிறப்பு திருப்பலிபூஜை, இதய நோயாளிகள் குணம்பெற வேண்டி நடைபெறும் கூட்டு திருப்பலி பிரார்த்த னையில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் கேரள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
புகழ்மிக்க இந்த ஆலயத்தில் இன்று இரவு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி குழந்தை ஏசு பிறக்கும் நிகழ்ச்சி பிரமாண்ட குடில் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து நள்ளி ரவு திருப்பலியும், நாளை (ஞாயிறு) காலை 11மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்ப லியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடு களை திருத்தல அருட் பணியாளர் இமானு வேல் தாசன் செய்து வரு கிறார். இதே போல் மானா மதுரை நகர்பகுதியில் உள்ள புகழ்மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் இன்று இரவு ஏசுபாலகன் பிறக்கும் நிகழ்ச்சியும், நள்ளிரவு திருப்பலியும் நடக்கிறது.
- திருநங்கைகள், திருநம்பிகளை சமமாக நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
- பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கண்டாங்கிபட்டி ஊராட்சி கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மனித கடத்தில் மற்றும் வணிக ரீதியில் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் நபர்களுக்கான இழப்பீடு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குடும்ப பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கினார். திருநங்கை கள், திருநம்பிகள் ஆகியோர் சமமாக நடத்தப்பட்ட வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினார்.
இதில் சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் கோதண்டராமன், ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை, தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் பேசினர். இந்த முகாமில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- சிவகங்கை மாணவர் விடுதியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
- ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் முதலியவற்றை நேரில் பார்வையிட்டு மாணவர்களின் வருகை குறித்து காப்பாளரிடம் கேட்டறிந்தார்.
அப்போது வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
- சிங்கம்புணரி அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செய்யப்பட்டது.
- ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உரிமையாளரின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காகோட்டையில் மெக்கானிக் ஜெயமணி என்பவருக்கு சொந்தமான நாச்சி காளை இருந்தது. இது தமிழக அளவில் நடைபெறும் ஜல்லிக் கட்டு பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளது. இந்த காளை நேற்று திடீரென்று இறந்தது. ஜல்லிக்கட்டு ஆர்வ லர்கள், ரசிகர்கள், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சி யைப் போல கருதி அந்த காளைக்கு துண்டு, வேட்டி, மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஜல்லிக்கட்டு தமிழக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி. ராஜசேகரன் உள்ளிட்ட பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உரிமையாளரின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
- காரையூரில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
- இதில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு துறைகளின் மூலம் 53 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, இலவச வீட்டுமனை பட்டா போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முகாமில் வட்டாட்சியர் வெங்கடேசன், தனி வட்டாட்சியர் ராஜா மற்றும் கண்ணதாசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன், உப தலைவர் அருணகிரி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் நம்பி, திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் வருகிற 24-ந் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
- இந்த முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சிவகங்கை
சிவகங்கை மாவ ட்டத் தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத் தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் வகையில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதனை விளை யாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் கலந்து கொண்டு பயனடையலாம். முகாமுக்கு வருபவர்கள் தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில் நுட்ப தகுதி, முன் அனுபவம், சாதி சான்று, இருப்பி டச்சான்று, வருமானச்சான்று உள்ளிட்ட வைகளையும், அசல் மற்றும் சான்றொப்ப மிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றையும் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரி வித் துள்ளார்.






