மாணவர் விடுதியில் வருவாய் அலுவலர் ஆய்வு

சிவகங்கை மாணவர் விடுதியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார்.
மாணவர் விடுதியில் வருவாய் அலுவலர் ஆய்வு
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் முதலியவற்றை நேரில் பார்வையிட்டு மாணவர்களின் வருகை குறித்து காப்பாளரிடம் கேட்டறிந்தார்.

அப்போது வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com