என் மலர்
நீங்கள் தேடியது "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க."
- ஊழலற்ற ஆட்சியை தருவதாக கூறுவதால் விஜய்யை ஆதரிக்கிறோம்.
- வரும் தேர்தலில் விஜய் ஆட்சிக்கு வரவேண்டும்
தமிழ்நாடு அரசியலில் பல சதாப்தங்களாக இருந்துவரும் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக தொடங்கியுள்ள கட்சி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் அமைச்சரவையில் இருந்த இவர், கடந்த சிலநாட்களாக ஓபிஎஸ் அணியில் இருந்துவந்தார். இந்நிலையில் அந்த அணியில் இருந்து பிரிந்து புதியக் கட்சித் தொடங்கினார்.
இக்கட்சியின் முதல் கூட்டம் இன்று காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார், "விஜய்க்கு எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்கும்" என அறிவித்துள்ளார்.ய
ஊழலற்ற ஆட்சியை தருவதாக கூறுவதால் விஜய்யை ஆதரிக்கிறோம். வரும் தேர்தலில் விஜய் ஆட்சிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- கனகவள்ளி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்குடி
எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளை முன்னிட்டு அரியக்குடியில் அவரது படத்திற்கு சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.- முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், மாசான், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, கிளைச் செயலாளர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர்.சித்ராதேவி, கவுன்சிலர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, கனகவள்ளி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.






