என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
    X

    எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

    • எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • கனகவள்ளி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    காரைக்குடி

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளை முன்னிட்டு அரியக்குடியில் அவரது படத்திற்கு சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.- முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், மாசான், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, கிளைச் செயலாளர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர்.சித்ராதேவி, கவுன்சிலர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, கனகவள்ளி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×