கிறிஸ்துமஸ் திருப்பலி

புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி நடந்தது. ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார்.
மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலிபூஜை நடந்தது.
மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலிபூஜை நடந்தது.
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் உள்ள புகழ் மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

முன்னதாக நள்ளிரவு12 மணிஅளவில் குழந்தை ஏசு பிறக்கும் காட்சி தத்ரூபமாக குடில் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைதொடர்ந்து ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

வருங்காலங்களில் பெரும் நோய் தொற்றுகள் ஏற்படக்கூடாது, இயற்கை சீற்றங்களின்றி மக்கள் அமைதியுடன்-மகிழ்ச்சி யுடன் வாழ ஜெபம் செய்யப்பட்டது. நள்ளிரவு திருப்பலிபூஜை நிறைவு பெற்றவுடன் புனித குழந்தை தெரசாள் ஆலயபங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com