என் மலர்
சிவகங்கை
- எம்.ஜி.ஆர். நினைவுநாளில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.
- சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.
வுமான செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக வந்தனர்.
சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசே கரன், நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் தலைவர் சிவதேவ்குமார், தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தர லிங்கம், ஒன்றிய செய லாளர்கள் கருணா கரன், அருள்ஸ்டிபன், பழனிச்சாமி, சிவாஜி, ஸ்ரீதரன், பாரதிராஜன் ஜெகசுவரன், சோனைரவி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், வக்கீல் பாரதிகண்ணன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சங்கர்ராமநாதன், குழந்தை, நகர, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- காரைக்குடியில் மகளிர் குழுக்களுக்கு ரூ.8.61 கோடி கடனுதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா நடந்தது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்தார்.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அரசு கூடுதல் தலைமை செயலாளர், அதுல்யாமிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயல் உறுப்பினர் கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் பிரியங்கா பங்கஜம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 95 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கல்வித்தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.
இளைஞர்கள் எந்த துறையில் ஆர்வ முள்ளவர்கள் என்பதை அறிந்து, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றார்போல் பயிற்சி அளிக்க சுமார் 95 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூலம் ஏறத்தாழ 5 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்துத்துறைகளின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தனிநபர் பயன்பெறுவது மட்டுமன்றி, ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வங்கிக்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர்.கே.ஆர்.ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், நகர்மன்ற ஆணையாளர் லெட்சுமணன், செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி தலைவர் செல்லப்பன், தாளாளர் சத்யன், பேரூராட்சி தலைவர்கள் முகம்மது மீரா, சாந்தி சிவசங்கர், ராதிகா, சங்கீதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் வேலுநாச்சியார் சிலைக்கு நகரசபை தலைவர் மரியாதை செலுத்தப்பட்டது.
- பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 226-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. நகர் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரை ஆனந்தன் தலைமை தாங்கினார்.
அவரது தலைமையில் தி.மு.க.வினர் வேலு நாச்சியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சி லர்கள் கார்த்திகேயன், ராமதாஸ், விஜயக்குமார், சரவணன், ராஜபாண்டி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அவரது வாரிசான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் வேலு நாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கருணாகரன் அருள்ஸ்டிபன், கோபி, சிவாஜி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி தலைவர் சங்கர்ரா மநாதன், பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சதிஷ்.மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
- ஜெயலலிதா நினைவு நாள் கபடி போட்டி நடந்தது.
- பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்துள்ள ஏரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஆபரத்தனபட்டி பிரபு, சிங்கம்புணரி ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கபடி போட்டி நடந்து வருகிறது. இதில் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அனிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.12 ஆயிரம், 3, 4-ம் பரிசாக தலா ரூ.8 ஆயிரம் ரொக்கமும், அம்மா நினைவு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியை மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் போட்டி நடக்கிறது. தொடக்க நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், வழக்கறிஞர் மணிமாறன், பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இதில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், நகரச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் தசரதன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
- புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி நடந்தது.
- ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் உள்ள புகழ் மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
முன்னதாக நள்ளிரவு12 மணிஅளவில் குழந்தை ஏசு பிறக்கும் காட்சி தத்ரூபமாக குடில் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைதொடர்ந்து ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
வருங்காலங்களில் பெரும் நோய் தொற்றுகள் ஏற்படக்கூடாது, இயற்கை சீற்றங்களின்றி மக்கள் அமைதியுடன்-மகிழ்ச்சி யுடன் வாழ ஜெபம் செய்யப்பட்டது. நள்ளிரவு திருப்பலிபூஜை நிறைவு பெற்றவுடன் புனித குழந்தை தெரசாள் ஆலயபங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
- எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- கனகவள்ளி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்குடி
எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளை முன்னிட்டு அரியக்குடியில் அவரது படத்திற்கு சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.- முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், மாசான், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, கிளைச் செயலாளர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர்.சித்ராதேவி, கவுன்சிலர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, கனகவள்ளி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
- காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ். அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர். அசோகன் வழிகாட்டுதலின்படி காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் பாலா தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், நகர மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வட்டாரந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
- சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மாற்றுத்திற னாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத்தி றனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து வட்டார அளவிலும் நடைபெற உள்ளது.
முதலில் 3.1.2023 அன்று திருப்புவனம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 6.1.2023 அன்று மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10.1.2023 அன்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 12.1.2023 அன்று காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 13.1.2023 அன்று கண்ணங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 20.1.2023 அன்று தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 24.1.2023 அன்று சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27.1.2023 அன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 31.1.2023 அன்று எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், முகாம்கள் நடக்கிறது.
1.2.2023 அன்று சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 3.2.2023 அன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 8.2.2023 அன்று சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில் 8 மார்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமத்துவபுர வீடுகளின் உரிமையாளர்களுக்கு பட்டா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி சமத்துவபுரத்திற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வருகை புரித்தார். அவரை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதனை தொடர்ந்து பெரியார் நினைவு தினத்தையொட்டி இங்குள்ள சிலைக்கு அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் மாலை அணி வித்து மரியாதை செய்தார். சமத்துவபுர வீடுகளுக்குள் சென்று அவர் ஆய்வு செய்ய வந்தபோது பெண்கள் ஆரத்தி எடுத்து, திலகமிட்டு வரவேற்றனர்.
அவரை குழந்தைகள் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றனர். குழந்தைகளிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், செல்பி எடுக்கலாமா என்று குழந்தைகள் கேட்க மொபைல் போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார்.
ஆட்டோ கிராப்பும் போட்டுக்கொடுத்தார். குழந்தைகள் பூங்கா வேண்டும் என்று கேட்க உடனே பூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
முன்னதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வரவேற்றார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கலைஞர் வீடு வழங்கினார். அவரது பேரனாகிய நான் பட்டா வழங்கு கிறேன் என்று கூறியதுடன் 100 சமத்துவபுர வீடுகளின் உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கினார்.
கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் ரூ.200 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்திருந்த நிலையில், முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் சுமார் ரூ.9 கோடியில் 7 சமத்துவ புரங்களில் உள்ள வீீடுகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இ்ந்த நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், கோட்டாட்சியர் பால் துரை, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, தனி வட்டாட்சியர் கண்ணதாசன், வருவாய் அலுவலர்கள் மன்சூர்அலி, ரமேஷ், கண்ணன், வேல்முருகன், ஒன்றிய சேர்மன் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு, சுகாதாரத் துறை துணை இயக்குநர் விஜயசந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- இடைக்காட்டூர் திருஇருதய திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
- ஏற்பாடுகளை திருத்தல அருட் பணியாளர் இமானு வேல் தாசன் செய்து வருகிறார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் 140 ஆண்டுகள் புகழ் மிக்க திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இங்கு ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு நாளாக கருதப்படுகிறது.
அன்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெறும் சிறப்பு திருப்பலிபூஜை, இதய நோயாளிகள் குணம்பெற வேண்டி நடைபெறும் கூட்டு திருப்பலி பிரார்த்த னையில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் கேரள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
புகழ்மிக்க இந்த ஆலயத்தில் இன்று இரவு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி குழந்தை ஏசு பிறக்கும் நிகழ்ச்சி பிரமாண்ட குடில் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து நள்ளி ரவு திருப்பலியும், நாளை (ஞாயிறு) காலை 11மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்ப லியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடு களை திருத்தல அருட் பணியாளர் இமானு வேல் தாசன் செய்து வரு கிறார். இதே போல் மானா மதுரை நகர்பகுதியில் உள்ள புகழ்மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் இன்று இரவு ஏசுபாலகன் பிறக்கும் நிகழ்ச்சியும், நள்ளிரவு திருப்பலியும் நடக்கிறது.
- திருநங்கைகள், திருநம்பிகளை சமமாக நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
- பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கண்டாங்கிபட்டி ஊராட்சி கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மனித கடத்தில் மற்றும் வணிக ரீதியில் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் நபர்களுக்கான இழப்பீடு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குடும்ப பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கினார். திருநங்கை கள், திருநம்பிகள் ஆகியோர் சமமாக நடத்தப்பட்ட வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினார்.
இதில் சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் கோதண்டராமன், ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை, தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் பேசினர். இந்த முகாமில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






