என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகங்கையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆேலாசனை நடத்தினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உள்ளனர்.
மத்திய மந்திரி வி.கே.சிங் அதிகாரிகளுடன் ஆய்வு
- அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய மந்திரி வி.கே.சிங் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
- மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி வி.கே. சிங் கலந்து கொண்டு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி இந்தி யாவில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவை வளாச்சிப்பாதையில் வழிநடத்தி செல்கிறார். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
அனைத்து மாநிலங்க ளிலும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்களின் பயன்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒவ்வொரு துறையைச் சார்ந்த அலுவலர்களின் கடமையாகும்.
தகுதியான பயனா ளிகளுக்கு உரிய பயன்கள் கிடைக்கப் பெறுவதற்கான நடவடிக்கைகளை, அலு வலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர்கள் பாண்டியன் (காரைக்குடி) நாகராஜன் (மதுரை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.






