search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்
    X

    சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்

    • வட்டாரந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திற னாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத்தி றனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து வட்டார அளவிலும் நடைபெற உள்ளது.

    முதலில் 3.1.2023 அன்று திருப்புவனம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 6.1.2023 அன்று மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10.1.2023 அன்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 12.1.2023 அன்று காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 13.1.2023 அன்று கண்ணங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 20.1.2023 அன்று தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 24.1.2023 அன்று சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27.1.2023 அன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 31.1.2023 அன்று எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், முகாம்கள் நடக்கிறது.

    1.2.2023 அன்று சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 3.2.2023 அன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 8.2.2023 அன்று சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்களில் 8 மார்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×