என் மலர்
சேலம்
- நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- மணிகண்டன் (வயது 27) என்பவர், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்தார்.
சேலம்:
சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவார் கோகிலா. இவர் நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சேலம் பொன்னம்மாப்பேட்டை தாண்டவம் நகர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மகன் மணிகண்டன் (வயது 27) என்பவர், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணி–யாமல் வந்து கொண்டிருந்தார். இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்–டர் கோகிலா, அவரை நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டுள்ளார்.
இதற்கு மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலாவுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அரசு ஊழியரை பணி செய்யப்படாமல் தடுத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மணி–கண்டனை கைது செய்தனர்.
- ஓமலூர் காவல் நிலைய எல்லையில் உள்ள முத்து–நாயக்கன்பட்டி, பல்பாக்கி ஆகிய கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன.
- முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலைய எல்லையில் உள்ள முத்து–நாயக்கன்பட்டி, பல்பாக்கி ஆகிய கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன.
முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்–பட்டது. இதில், ஓமலூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்–குமரன், நாகப்பன் மற்றும் போலீஸார் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், இந்தக் கிராமத்தை கஞ்சா இல்லாத கிராமமாக உருவாக்கிய மக்களுக்கு பாராட்டு தெரிவித்தஇன்ஸ்பெக்டர் செல்வராஜன், இளை–ஞர்கள் புகை , மது பழக்கம் இல்லாமல் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- தாதகாப்பட்டி திருஞானம் நகரில் உள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
- பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சாயநீர் எதிர்பாராத விதமாக அவரது உடல் மீது கொட்டியது.
அன்னதானப்பட்டி:
சேலம் கருங்கல்பட்டி, இந்திரா நகர் 6-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50).
இவர் தாதகாப்பட்டி திருஞானம் நகரில் உள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று வேலையில் இருந்த போது, பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சாயநீர் எதிர்பாராத விதமாக அவரது உடல் மீது கொட்டியது.
இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்ன–தானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பாஸ்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 55). இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில், உடையாப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பாஸ்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது சகோதரர் மோகன் கொடுத்த புகார் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சேலம் மணியனூர் அருகே உள்ள நாட்டாமங்கலம் பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் பீகாரைச் சேர்ந்த வாலிபர் பரூன் சிங் (25), நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பரூன் சிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது சகோதரர் ரூபேந்திர சிங் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மன்னார்பாளையம் வாய்க்கால் பட்டறை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (35). இவர் நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில், காந்தி நகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக சென்றதால், நிலை தடுமாறு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் தினேஷை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ், நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தினேஷின் மனைவி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உயிருக்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் ராணுவ வீரர் சேலம் மாவ்வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 50 செண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு நிலம் எங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
சேலம்:
உயிருக்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் ராணுவ வீரர் சேலம் மாவ்வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் குகை அம்பேத்கர் காலனியில் வசிப்பவர் விஸ்வநாதன் (58). முன்னாள் ராணுவ வீரரரான இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் 24 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா பொன்னியம்பட்டி வையாபுரி கோம்பை பகுதியில் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்கினேன். தற்போது நிலத்தை விற்பனை செய்தவர்களே நிலத்தில் 50 செண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு நிலம் எங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்தாண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற பிறகும் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. ராணுவத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கே இந்த நிலைமையா என நினைத்து வேதனைப்படுகிறேன். ஆகவே எனது உயிருக்கும் குடும்பத்தார் உயிருக்கும் பாதுகாப்பு அளித்து நிலத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
- தங்கமணி பாலூட்டிய போது, குழந்தைக்கு புரை ஏறியதாக தெரிகிறது.
- இதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் கொண்டலா ம்பட்டி கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி தங்கமணி (வயது 20). இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலை நேற்று தங்கமணி பாலூட்டிய போது, குழந்தைக்கு புரை ஏறியதாக தெரிகிறது. இதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து உடனடியாக பூலாவரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்கள், முதலுதவி சிகிச்சை அளித்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, வரும் வழிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து கொண்டலா ம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணை எந்திரம் ஆக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
- இந்த பயிற்சி முகாமுக்கு கொளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த தின்னப்–பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணை எந்திரம் ஆக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமுக்கு கொளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் இந்துமதி, உதவி வேளாண் அலுவலர் சங்கீதா ஆகியோர் வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினர். இதில் 50 விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயத்தில் பண்ணை எந்திரங்கள் பயன்பாடுகள், வேளாண்மை துறை திட்டங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
- ஏற்காட்டில் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள், இரவு 7 மணி அளவில் ஊர் திரும்பினர்.
- வேனில் பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடி மலைப்பாதையில் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
ஏற்காடு:
தர்மபுரி மாவட்டம் அரூர் மருதிப்பட்டி பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் ஆதிதிராவிட அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ்-2 படிக்கும் 75 மாணவ, மாணவிகள், 9 ஆசிரியர்கள் நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டை சுற்றிப் பார்க்க 3 வேன்களில் வந்துள்ளனர்.
ஏற்காட்டில் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள், இரவு 7 மணி அளவில் ஊர் திரும்பினர். இந்த நிலையில் ஏற்காடு, கொட்டச்சேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு வேனில் பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடி மலைப்பாதையில் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆசிரியர் தண்டபாணி (வயது45) கால், தோள்பட்டை மற்றும் தலையில் பலத்த காயங்களுடன், நாகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்துக்குள்ளான வேனில் மாணவிகள் மட்டுமே பயணித்தனர். இதில் பிளஸ்-2 மாணவி சவுபுராணி (வயது 17) மற்றும் ஓட்டுனர் சசிகுமார் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மாணவிகள் யாழினி, பரிமளா, ஸ்ரீநிதி, உத்ரா, தர்ஷினி ஆகியோர் லேசான காயங்களுடன் முதலுதவி செய்யப்பட்ட வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடம் விசாரித்து போக்குவரத்தை சரி செய்தனர்.
- வேலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
சேலம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
சமீபத்தில் வேலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக, சேலம் மண்டலத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார்.
சேலம் மாவட்டத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து, இக்கூட்டத்தில் விவாதிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பு 2022-23-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவற்றை ஒவ்வொரு ஒன்றியம் மற்றும் தாலுகா வாரியாக, அனுப்பும்படி முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயசந்திரன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
- ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1454 கன அடியாக இருந்த நீர்வந்தது, இன்று காலையும் அதே நிலையில் நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
நேற்று 103.76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.77 அடியாக உள்ளது.
- கிச்சிப்–பாளையம் வேல்முருகன் நகர் பகுதி சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்பவர் மொபட்டில் வந்தார். அவரை, இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தார்.
- சக்திவேல் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாநகரம் தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன், நேற்று இரவு சக போலீசாருடன் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் வாகன தணிக்கை–யில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கிச்சிப்–பாளையம் வேல்முருகன் நகர் பகுதி சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்பவர் மொபட்டில் வந்தார். அவரை, இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தார்.
இதில், சக்திவேல் ஒட்டி வந்த மொபட், ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், சக்திவேல் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து ராஜராஜன் கேட்டபோது, சக்திவேல் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால், ராஜராஜன் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் சக்திவேல் மீது புகார் செய்தார்.
அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- களரம்பட்டி மெயின்ரோடு காலிக்கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ் - 2 படித்து வருகிறார்.
- மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியதாக தெரிகிறது.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம், களரம்பட்டி மெயின்ரோடு காலிக்கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ் - 2 படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் சேலம் சங்கர் நகர் பகுதி சேர்ந்த சசிக்குமார் (32) என்ற வாலிபர், டயர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சசிக்குமார், மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியதாக தெரிகிறது. இதை பார்த்த பெற்றோர், மாணவியிடம் இதுபற்றி விசாரித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சசிக்குமாரை தேடி வருகின்றனர்.






